
தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவருக் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வழக்கம்போல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் இருவரும்.
என்றைக்குமில்லாதபடி தன் எஜமானியம்மாவைப் பற்றி மகாவிடம் மனம் விட்டுப் பேசியபடியே நடந்த சகா…
‘எங்க எஜமானியம்மா போல வராது! ரொம்ப நல்ல குணம்!’ என்று சொல்ல…,
‘எல்லாம் வேலை வாங்குகிற டெக்னிக்!’ என்று ஒப்புக்கொள்ளாமல் மகா வார்த்தைகளை உதிர்க்க, பொத்துக் கொண்டு வந்தது கோபம் சகாவுக்கு.
‘காலையில் எஜமானிக்குக் காப்பி போட்டுக் கொடுக்கையில் அதே பாலில், அதே டிகாஷனில் எனக்கும் போட்டுக் கொள்ளலாம் ஒன்றும் சொல்லாது எங்க எஜமானியம்மா… தெரியுமா?!’ என்று பெருமையாய்ச் சொல்லிவிட்டு, தொடர்ந்து…
வாசல் கூட எஜமானியம்மாவே கூட்டிடும்! நான் வெறும் வாஷிங்க் மெஷினில் துணியைத் துவைக்கப் போட்டுத் துவைத்ததும் எடுத்துக் காயப் போட்டுக், காய்ந்ததும் எடுத்து மடித்துக் கொடுப்பதோடு சரி! அதுவே பீரோவில் அழகா அடுக்கி வைத்துக் கொள்ளுமாக்கும்!. கிச்சனிலிருந்து - பெட்ரூம் வரை எங்கும் போக பர்மிஷன் உண்டு! மத்த மொதலாளிக மாதிரி எல்லாம் ‘ஆச்சாரம் அனுஷ்டானமெல்லாம்’ சொல்லிக் கடுப்பேத்தாது!., என் சுதந்திரத்தில் அது தலையிடாது என்று மகாவிடம் சகா சொல்ல…,
சம்பளம்….??? என்று மகா கேட்க.