தீபாவளி சிறப்பு சிறுகதை - தீபாவளிக்கு இரண்டு செயின்..!

தலைதீபாவளி கொண்டாட்டத்தின் போது தங்கை மீதான பொறாமையால் எழுந்த குடும்பச் சண்டை மற்றும் அதன் முடிவு பற்றிய சுவாரசியமான சிறுகதை.
தீபாவளி சிறப்பு சிறுகதை | Couple fight
தீபாவளி சிறப்பு சிறுகதை| Couple fightImage credit: Chatgpt
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

மூன்று நாட்களாக ராஜாவுடன் பேசவில்லை, ராணி. இந்தத் தீபாவளிக்கு அம்மா வீட்டுக்குப் போயே ஆகவேண்டும் என்று ஒரே அடம். 

அவர்களுக்குக் கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவளது தங்கைக்குக் கல்யாணம் ஆனது. ஆக, அவர்களுக்கோ இதுதான் தலைதீபாவளி. 

போன வாரம் ராஜாவுக்கு போன் போட்டார் அவனது மாமனார்.  

"மாப்ள.. அனிதாவுக்குத் தலைதீபாவளி இல்லையா... அவங்களை நம்ம வீட்டுக்கு அழைச்சிருக்கேன்... நீங்களும் ரெண்டு பேருமா அவசியம் வந்துடுங்க..."

ராஜாவின் ஆபீஸில் ஆடிட்டிங். அவன்தான் சீனியர் கிளார்க். ஆடிட்டிங்கை அவனே முன்னின்று கவனித்துக் கொண்டிருக்கிறான். பதினைந்து நாட்களுக்குள் ஆடிட்டிங் முடியவேண்டும். அதற்கடுத்தப் பதினைந்து நாட்களுக்குள் ரிப்போர்ட்டைக் க்ளோஸ் செய்யவேண்டும். லேட் ஆக ஆக அதற்கு ஏற்றார்போல ரேட்டிங்கில் மார்க் குறையும். இதுதான் கம்பெனி நியதி.

அத்துடன் மேனேஜர் இந்தத் தடவை ப்ரோமோஷன் இன்டர்வியூக்கு வேறுபோகிறார். இந்தச் சமயத்தில் ஆடிட்டிங்கின் ரேட் குறைந்தால் அவரது ப்ரோமோஷன் தடைபடும்.

இவனுக்கும் நாளைக்குப் ப்ரோமோஷனுக்குப் போகும்போது அவர்தான் மார்க் போடவேண்டும். அந்த மார்க்கும் இவனது ப்ரோமோஷனுக்கு உதவியாயிருக்கும்.

Loading content, please wait...