சிறுகதை: என் இரண்டாவது சித்தப்பா!

படித்து முடித்த கையோடு சென்னை வந்த இளம்பெண்ணுக்குக் காத்திருந்த சவாலும், முகம் தெரியாத மனிதர் செய்த உதவியும் நெகிழ வைக்கும் சிறுகதை!
சிறுகதை | Man and young woman
சிறுகதை | Man and young womanImage credit: Chatgpt
முகிலை இராசபாண்டியன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் முகிலன் குடியிருப்பு சொந்த ஊர். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகவும் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றவர். ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், ஐந்து நாவல்கள், மூன்று நாடகநூல்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை படைத்தவர். கல்கி, கலைமகள், கணையாழி, தினமணி கதிர், தாய் முதலான இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. கல்கி ஆன்லைனிலும் தற்போது தடம் பதித்துள்ளார்.

Updated on: 
MM strip
MM strip

“சென்னையிலதான் சித்தப்பா இருக்காங்க…, அங்க தங்கிக்கலாம்…! இதுக்கு ஏன் மூஞ்சை உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கிறே….” என்று தாய் சொன்னதைக் கேட்டும் கேட்காமலும் அப்படியே இருந்தாள் சுமித்ரா.

இப்போதுதான் சுமித்ரா கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து இருக்கிறாள். சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் விண்ணப்பம் பெற்று ஆன்லைனில் நடத்திய இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

‘உடனே வேலையில் வந்து சேருங்கள்’ என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். திருநெல்வேலியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்த அவள் இதுவரை சென்னைக்குத் தனியே போனது இல்லை. சென்னைக்குப் போவது அவளுக்குப் பெரிய சிரமமாய்த் தெரியவில்லை. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, சென்னை எக்மோருக்குப் போய்விடலாம். அங்கிருந்து அந்தக் கம்பெனி இருக்கும் சோழிங்கநல்லூருக்குச் எப்படிப் போவது? அதன்பிறகு எங்கே தங்குவது? என்பதுதான் அவளுக்கு முன்னால் ஆயிரம் கேள்விக் குறியாய் நின்றது.

சுமித்ரா கொஞ்சம் தைரியசாலிதான். அவளை யாரும் ஏமாற்றமுடியாது, என்றாலும் கடல்போல் பரந்து கிடக்கும் அந்தச் சென்னையில் தனியொருத்தியாக எப்படி அந்தக் கம்பெனிக்குப் போவது என்று நினைக்கும்போதுதான் மிகவும் கவலைப்பட்டாள்.

Loading content, please wait...