சிறுகதை: தாய் மாமன்!

சொந்த அக்காவின் வறுமையை மறந்து சுயநலமாக இருந்த தம்பிக்கு பாடம் கற்பித்து, தாய்மாமன் கடமையைச் செய்து முடித்த நண்பனின் நெகிழ்ச்சியான சிறுகதை.
சிறுகதை | Parent and their child and grand mother
சிறுகதை | Parent and their child and grand motherImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

வாசலில் நிழலாடுவது போலிருந்தது.

கவியரசு வாசலை எட்டிப் பார்த்தான். அவன் அம்மா தயக்கத்துடன் நின்றிருந்தாள். முகத்தில் ஒருவிதமான தவிப்பு தெரிந்தது.

'வாம்மா' என்று அழைக்க அவனுக்கு மனசு வரவில்லை.

இரண்டு மாதத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு சென்றவள் இப்போது எதற்கு வந்திருக்கிறாள் என யோசித்தான்.

தன்னுடைய பேத்தி பெரிய மனுஷியாகி விட்டாள் என்ற செய்தி கேட்டுத்தான் சண்டையை மறந்து வந்திருந்தாள் கவியரசின் அம்மா வைதேகி.

கவியரசு மனைவி ரமாதான் வீட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு செய்பவள்.

இரண்டு மாதத்திற்கு முன்பு மாமியார் மருமகள் இடையே வாய்ச்சண்டை.

கோபித்துக்கொண்டு சென்றவள் இன்றுதான் வாசலில் வந்து நிற்கிறாள் பேத்தியைப் பார்க்கும் ஆவலில்.

கவியரசு வீட்டினுள் எட்டிப் பார்த்தான். எந்த ஒரு விஷயத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் அவனுக்கு இல்லை.

ரமாவும் வைதேகி வந்து இருப்பதைக் கவனித்து விட்டிருந்தாள்.

'சரி வரச்சொல்லுங்க' என்பதுபோல் கண்களால் ஜாடை காட்டினாள்.

கவியரசு புரிந்துக்கொண்டான்.

"வாம்மா.." முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com