சிறுகதை: கால் கட்டு!

Tamil short story - Husband, Wife, Father In law, Mother In Law and Son
Tamil short story - Husband, Wife, Father In law, Mother In Law and Son
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on
mangayar malar strip
Mangayar Malar

"அம்மா... மம்மி... கதவை திறம்மா..."

தீபக் எப்போதும் போல குடித்து விட்டு நிற்கக் கூட முடியாமல் தள்ளாடிக் கொண்டே கதவை தட்டினான்.

"போ போ உன் அருமை மகன் வந்திருக்கான், போய் கதவை திற..." என்றாள் மகள் வாணி.

மரகதம் போய் கதவை திறந்து, "சீக்கிரம் உள்ளே வாடா, ஏண்டா தினமும் இப்படி வர்ற?", என்று சொல்லி விட்டு அவனை வேகமாக உள்ளிழுத்து கதவை தாளிட்டாள்.

"மம்மி பசிக்குது... என்ன இருக்கு?"

"நீ தயவு செய்து உன் ரூமுக்கு போயிடு, சாப்பாடு நான் கொண்டு வர்றேன், உங்க அப்பா எழுந்துட்டா போச்சு அவ்வளவுதான்" என்று அவனை துரத்தினாள். பிறகு சாப்பாட்டை கொடுத்து அவனை ஒரு வழியாக படுக்க வைத்தாள் மரகதம்.

காலையில் தீபக் எழுந்து, ஒன்றுமே நடக்காதது போல தந்தையிடம், "Hi dad, good morning" என்றான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com