
காந்திமதியம்மாவை காலத்துக்கும் மறக்க முடியாது கணபதியால்! ஒருநாள் மாலை ஆறுமணி இருக்கும்... ‘அண்ணாச்சி கடையில் ஊசி வாங்கணும், காசுகொடு!’ ன்னு என்று கேட்க, அவள் அவனைக் கடிந்து கொண்டாள் கடுமையாக! ’வெளக்கு வைக்கிற நேரத்தில ஊசி வாங்கக் கூடாது!’ என்று அவனைத் திட்டினாள்… கன்னாபின்னாவென்று!
அவளைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் ரொம்பக் கறார். ‘விளக்கு வச்சுட்டா, ‘நிறைகொடத்துல யாருக்கும் ஃபுல்லா தண்ணி கொடுக்க மாட்டாள். வெள்ளி, செவ்வாய் மறக்காம ‘திருஷ்டி சுற்றிப் போட்டு வாசலில் எரியவிடுவாள். அவள், ஐதீகமும், ஆச்சாரமும் அன்று அவதி தந்தாலும், அதிலெல்லாம் அர்த்தமில்லாம இல்லை.
ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரி, வெளியூர் போய் மாலைதான் வீடு திரும்பினாள்.
‘அக்கா... ஒரு கொடம் நல்ல தண்ணி கொடேன்!’ என்று கணபதி மனைவி கல்யாணியைக் கேட்டாள். இவளும் கொடுக்கப் போக, ‘இந்தா பாரு... வெளக்கு வச்சதுக்கு அப்புறம் யாரா இருந்தாலும் நிறை கொடம் தண்ணி கொடுக்கக் கூடாது!’ என்று மறுத்தாள்.