
“என்னங்க நீங்க இப்ப ஃப்ரீயா? கொஞ்சம் பேசலாமா..?”
அறைக்குள் நுழைந்தபடியே கேட்டாள் என் சரிபாதி ப்ரீதி.
‘ஃப்ரீயா இல்லாவிட்டாலும் நீ பேசத் தான் போறே.. அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத பில்ட்அப் கேள்வியெல்லாம்..?’ என மனதில் தான் நினைத்துக் கொண்டேன். முணுமுணுக்கக் கூட இல்லை, மனைவி ப்ரீதிக்கு கேட்டுவிட்டால் ஆபத்து என்கிற எண்ணத்தில்.
“என்ன சொல்லும்மா..” என்றேன் காதலுடன்... லேப்டாப்பை மூடிவைத்தவாறே.
“ஒண்ணுமில்லை, நம்ம ஆனந்த்..க்கு வர்ற இருபத்தியாறாம் தேதி, அதான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் வருதுல்ல..”
“ஆமாம்..”
“அதுவிசயமாத் தான் கொஞ்சம் டிஸ்கசன் பண்ணனும்...”
‘நாம எப்பம்மா டிஸ்கசன் பண்ணியிருக்கோம். நீ முடிவெடுப்பே. நான் சரின்பேன். அதுதானே இதுவரை நடந்திருக்கு..’ நினைத்துக் கொண்டேன்.
“அந்த பர்த்டேவை எப்படி செலிபிரேட் பண்ணலாம்ன்னு தான்..”