சிறுகதை: வாக்கு – வழக்கு!

இன்றைய திருமண காலதாமதத்திற்குக் காரணம் வரன்களா அல்லது பெற்றோர்களா? சுயம்வர அரங்கில் நடந்த அனல் பறக்கும் வழக்காடு மன்ற விவாதம் பற்றிய சிறுகதை
சிறுகதை | Debate show
சிறுகதை | Debate showImage credit: Gemini AI
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on: 
MM strip
MM strip

'சரிதா' குளிரூட்டப்பட்ட மினி ஹால். கூடியிருந்த ‘கல்யாண கவலை’ வரன்களின் பெருமூச்சால், வழக்கத்திற்கு மாறாக சூடாக இருந்தது.

'நம் சுயம்வரம்' திருமண வரன்களின் பிரபலமான ஜாதக பரிவர்த்தனை நிறுவனம் சார்பில், அவர்களிடம் பதிவு செய்தவர்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாய், கூடியிருந்தோரைக் குதூகலப்படுத்தவும், அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கவும், ஓர் வழக்காடு மன்ற நிகழ்ச்சி.

வழக்காடு மன்றத்தின் தலைப்பு..

'இன்றைய திருமண காலதாமதத்திற்குக் காரணம்... '

1. 'வரன்களே' என்றும்

2. 'பெற்றோர்களே' எனவும், வாதிட, வாதி, பிரதிவாதிகள்.

நீதியரசராக, திரு. தர்மராஜன்.

'வரன்களே' என வாதிட - பெரியவர் விஸ்வநாதன் .

'பெற்றோர்களே' என வாதிட பிரதிவாதியாக கல்லூரிப் பேராசிரியை ஸ்ரீமதி.

பலரும் ஆர்வமாகக் காத்திருந்த வழக்காடு மன்றத்தை, தொடங்கி வைத்துப் பேசத் தொடங்கினார் நீதியரசர் தர்மராஜன்.

''இங்கு கூடியிருக்கும் அனைத்து ஆண் பெண் வரன்களையும், அவர்களின் பெற்றோர்களையும் எங்களது அணியின் சார்பில் வரவேற்கிறேன். திருமணம் அனைவருக்கும் ஒரு ‘சொர்க்கவாசல்’ மாதிரி. புதிய உலகை நோக்கிய பயணத்திற்கான திறவுகோல். என்ன உண்மைதானே?...'' என ஒரு நிமிடம் அவர் இடைவெளி விட,

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com