சிறுகதை: சோதனை!

Dad-Mom-Daughter
Dad-Mom-DaughterAI Image
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on: 
Mangayar malar strip
Mangayar malar strip

"பத்மா… பத்மா… பத்துமா… பத்… மா..." கணபதி கர்ஜித்தார்.

சிறிது நேரம் கதித்து வந்த பத்மா,

"அப்பா, கூப்பிட்டீங்களா?"

"எடு செறுப்பை. இங்க கழுதையா கத்தி கூப்பிட்டே இருக்கேன். அப்படி காதில கூட வாங்காம என்ன செய்துட்டு இருந்தேடி கழுதே."

அவர் கோபம் உச்சிக்கு சென்றது.

பத்மா ஓவென கதறி அழுது கொண்டே தாயிடம் சென்றாள்.

அம்மா ஓடி வந்தாள்.

"ஏங்க உங்களுக்கு என்ன ஆச்சு. பைதியம் கிய்த்தியம் பிடிச்சிடுத்தா? ஒரே பெண். என்னை விட எவ்வளவு உசத்தியா அன்பா பாசத்தை கொட்டி வளர்த்திருப்பீங்க. அடுத்த வாரம் கல்யாணம் வெச்சிட்டு புருஷன் வீட்டுக்கு போகப்போற பெண்ணை இப்படியா அழ விடுவாங்க. அவ யாருகிட்ட பேசிட்டு இருந்தா. கட்டிக்கப்போறவன் ஓயாது போன் பேசிட்டே இருக்கான். குழந்தை என்ன செய்வாள். அவனுக்கு பதில் சொல்வாளா? இல்லை உங்களுக்கா?" அவர் மனைவியும் ஒரு பிடி பிடித்தாள்.

"அடியே சூர்ப்பனகே எல்லாம் நான் கொடுத்த இடம். எனக்கே இராமாயணம் சொல்லிட்டு போறியா. உடனே இங்க வரச்சொல்லுடி அந்தக கிராதகியை."

அப்பா சொன்னது கேட்டதும் அம்மா சொல்வற்கு முன்பே ஓடிவந்து நின்றாள் பத்மா.

"அப்பா என்னங்கப்பா, சொல்லுங்க."

"ஏன்டி நேத்து ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு வாங்கிட்டு போனியே."

"ஆமாம்பா."

"எதுக்கு?"

"சில மேக் அப் சாமான்கள் வாங்கதாம்பா."

"வாங்கிட்டியா?"

"வாங்கிட்டேம்பா."

"எவ்வளவு ஆச்சு?"

"சரியா எண்ணூறு ரூபாப்பா."

"அப்ப மீதி எவ்வளவு?"

"இருநூறு" என்று அவள் ஒரு நடுங்கிய குரலில் கூறினாள்.

"அது இப்ப எங்கே?"

"எங்கிட்டதாம்பா."

"ஏன்டி நாயே

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com