சிறுகதை: ரயில் பயணம்!

Tamil Short Story - Train Travel!
MAn and woman talking
Published on

இன்று காலை  அப்பா கிட்ட இருந்து  ரம்யாவுக்கு போன் வந்தது. சென்னையிலேயே ஒரு பையன் ரம்யாவை பொண்ணு பாக்க வரானாம்.

ரம்யாவுக்கு அப்பாவிடம் கோபிமேல தனக்கு இருக்கும் விருப்பத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ’ஒரு நாள் ரயில் பழக்கம்'. அதில் அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவன் குடும்பத்தை பற்றி உனக்கு என்ன தெரியும்? அவன் சம்பளம், படிப்பு இது எல்லாம் கேட்டால் கூட என்ன தெரியும்?’ என்று சொல்லி வாயடைத்து விடுவார்கள்.

‘பையனைப் பார்த்து விட்டு பிடிக்கவில்லை’ என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தாள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி இருக்கும். கார் ஒன்று ரம்யாவின் வீட்டின் முன் வந்து நின்றது. பின்னால் வரும் இன்னொரு காரில்  மாப்பிள்ளைப் பையன் வருவதாக சொல்லியபடி பையனின் அப்பா, அம்மா இறங்கினாங்கா. ரம்யாயின் அப்பா அவர்களை வரவேற்று ஹாலில் உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார். ரம்யாவுக்கு டென்ஷன் கூடிக் கொண்டே போனது.

சென்ற வாரம் ரயிலில் நடந்த அந்த நிகழ்வு அவள் மனதில் ஓடியது.

ரம்யா தன் அத்தைப் பெண் சுமங்கலாவின் கல்யாணத்துக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பி விட்டாள். அவசர அவசரமாக அன்று மாலை சென்னை எக்மோரை சென்றடைந்தாள். ரம்யாவிடம் ஓப்பன் டிக்கெட் தான் இருந்தது. எப்படி திருச்சிக்கு செல்வது என்று தெரியவில்லை. புறப்படத் தயாராக இருந்தது பல்லவன் எக்ஸ்பிரஸ்.

கூட்டத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த அவளை ’ரம்யா’ என்று அழைத்தது ஓர் ஆண்குரல். ’நீங்கப் போய் எஸ்5 ல சீட் 2வுலே உட்காருங்க’ என்று சொன்ன அந்த ஒயிட் அண் ஒயிட் ஆசாமி அவளது டிக்கட்டை வாங்கி அதில் அதையே எழுதியும் கொடுத்தான்.

அப்போதுதான் அவன் அந்த ரயிலின் டிடிஇ என்ற விவரம் அவளுக்கு தெரிந்தது. சுற்றி அவ்வளவு பேர்கள் இருந்தாலும் எப்படி இவளுடைய பெயரை கண்டுபிடித்தான்? எப்படி இவளுக்கு சீட்டு இல்லை என்று தெரிந்து கொண்டான்? கேட்டாலே உதவி செய்யாத இந்த காலத்தில கேட்பதற்கு முன்னாலே எப்படி உதவி செய்தான்? என்றெல்லாம் நினைத்துக் கொண்டே தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்ல போய்  உட்கார்ந்தாள் ரம்யா.

யார் இவர்? பார்க்க நன்றாக இருக்கிறான். உதவும் உள்ளம் இருக்கிறது. ரயில் கிளம்பி அரை மணி நேரத்திற்கு பிறகு மின்னல் வேகத்தில் வந்தவன், ’எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?’ என்று கேட்டுவிட்டு, அடுத்து வேலையை பார்க்க சென்று விட்டான். அவனுடைய நண்பர்களில் ஒருவர் ’கோபி’ என்று அவனை அழைத்ததிலிருந்து அவனுடைய பெயர் ’கோபி’ என்று தெரிந்து கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சகுனம்!
Tamil Short Story - Train Travel!

திருச்சியில் இறங்கின உடனே 3  இட்லி, ஒரு பால் ஆர்டர் பண்ணி ரம்யாகிட்ட கொடுத்து, ’சாப்பிடுங்க’ என்று சொன்னான் கோபி. அவள் சாப்பிட்டு முடிக்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. ’பை, பை’ சொல்லிவிட்டு  புறப்பட்டான் கோபி. ரம்யாவும் மண்டபத்திற்கு ஆட்டோவில் புறப்பட்டாள்.

போகும் வழியெல்லாம் அவளது எண்ணமெல்லாம் கோபியை பற்றியே. ’என்ன ஒரு சுறுசுறுப்பு? யார் இவர்?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டே கல்யாண மண்டபத்தை அடைந்தாள்.                

சென்னை திரும்பிய ரம்யா கல்லூரிக்குச் சென்ற உடனே உயிர்த் தோழி உமாவை தனியே அழைத்தாள். நாள் முழுக்க கோபி புராணம்தான். ஒரு கட்டத்தில் உமா, ’கூடிய சீக்கிரம் அந்த பையனைக் கண்டுபிடிச்சு உன் கண்  முன்னே நிறுத்தறேன்.’ ன்னு காட்டமா சொல்லி அவள் புலம்பலுக்கு ஒரு கமாவை போட்டு வைத்தாள். ஆனால் உமாவுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. அவளும் கோபியும் ஒருவரை ஒருவர் ஆழமாக விரும்புவது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றும் முடிவும் செய்து விட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!
Tamil Short Story - Train Travel!

யாரோ கூப்பிட நிஜ உலகுக்கு திரும்பினாள் ரம்யா.

பின்னால் வந்த இனோவாவில் மாப்பிள்ளை பையனும், அவளது தங்கை உமாவும் வந்து இறங்கினாங்க. கோபிதான் கல்யாண மாப்பிள்ளை. அவனைப் பார்த்த உடனே மனமார மகிழ்ச்சியை உணர்ந்தாள். ’எத்தனை கண்ணியமான மனிதர்! எல்லா ஆண்களும் இவரைப் போல் இருந்தால் நல்லா இருக்குமே. இவரை திரும்ப பார்க்க வேண்டும் என்று எத்தனை முறை நினைத்திருந்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரம்  பார்ப்போம்’னு நினைக்கவே இல்லையே. அவள் மனசுக்குள் பட்டாம் பூச்சி அடிக்கத் தொடங்கியது. மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அன்று டிக்கட் பின்னால் இருந்த உயிர்த் தோழி உமாதான், இன்று அவளின் வாழ்க்கையின் பின்னால்.             

’அண்ணா, இவங்கதான் நீங்க பாக்கணும்னு சொன்ன ரம்யா. நல்லா பாத்துக்கோ. உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன்’ன்னு சொன்ன உமாவை கட்டி அணைத்துக் கொண்டாள் ரம்யா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com