
பூ மாதிரி மென்மையாக இருந்த ஆப்பத்தினை தன் பிஞ்சு விரல்களால் வலிக்காமல் பிய்த்து, அருகில் டபராவுக்குள் இருந்த தேங்காய்ப் பாலுக்குள் மூழ்கடித்து, ஒரு புரட்டு புரட்டி சலவை செய்து எடுத்து. அலுங்காமல் குலுங்காமல் வாய்க்குள் இட்டுக் கொண்டான் சக்தி.
எதிர் டேபிளில் அமர்ந்து, ஏழு வயது மகன் சாப்பிடும் அழகை மனம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மெய்யப்பன்.
“எத்தனை நாள் ஆசை தெரியுமாப்பா இப்படி தேங்காய்ப் பால் ஆப்பம் சாப்பிடனும்ன்னு! இன்னைக்குத் தான் அது நிறைவேறுச்சு. ரொம்ப நன்றிப்பா...” என்றான் மகன்.
சர்வர் அருகில் வந்து நின்றார். “வேற ஏதாவது..?”
மெய்யப்பனுக்கு தன் சட்டைப் பைக்குள் ஒற்றைத்தாளாக இருந்த ஐம்பது ரூபாய் மட்டுமே நினைவுக்கு வந்தது. மகனிடம் ‘இன்னொன்று வேணுமா’ எனக் கேட்க அச்சமாக, கூச்சமாக இருந்தது.