சூதாடுவோரின் கல்... 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த கல்... அது எந்த கல்?

INDIAN JADE
INDIAN JADE
Published on

நவரத்தினங்கள் ஒன்பது. இவற்றை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள் ஏராளம். இதைத் தவிர உபரத்தினங்கள் என அழைக்கப்படும் ரத்தினங்களும் ஏராளம் உண்டு. இங்கு கல் பச்சை என்று அழைக்கப்படும் உப இரத்தினக் கல்லின் மகிமையையும் அதை அணிவதால் நமக்கு ஏற்படும் நல்ல பலன்களையும் பார்க்கலாம்.

பச்சைக் கலரில் முப்பதுக்கும் மேற்பட்ட இரத்தினக் கற்கள் உள்ளன. மரகதம் பச்சை வண்ணத்தில் உள்ளது. இதை ஜாதி பச்சை என்று கூறுவர். அடுத்து கல் பச்சை என்று கூறப்படுவது இந்தியன் ஜேடு (INDIAN JADE) என்று அழைக்கப்படுகிறது. கல் படிக வகையைச் சார்ந்த இதை அனெஞ்சூரியன் (AVENTURINE) என்று கூறுகிறோம்.

AVENTURINE என்பது இத்தாலிய வார்த்தையான A VENTURA என்பதிலிருந்து தோன்றியது. “தற்செயலாக” என்பது இதன் பொருளாகும். இது அதிர்ஷ்டத்தைத் தரும் ஒரு கல்லாகும். புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதிர்ஷ்டத்தைத் தரும் இது ஒரு வகை க்வார்ட்ஸ் கல் ஆகும். பிராண சக்தி அதிகம் உள்ள கல் இது. எந்த வித நோயாக இருந்தாலும் இதை அணிந்தால் அற்புத நிவாரணத்தைக் கொடுக்கும் இது.

சிறுநீரகக் கோளாறுகள், இதயக் கோளாறுகள் உள்ளிட்டவற்றைச் சரிப்படுத்தும் தன்மை வாய்ந்தது இது. இன்ன வியாதி என்று தெரியாதவர்கள் இதை அணிந்தவுடன் வியாதி இன்னதென்று அறிந்து சிகிச்சையை மேற்கொண்டு குணம் அடைவர்.

இதை அணிபவர்கள் உயரிய ஆன்மீக அனுபவத்தை அடைவர்.

இது மனதைச் சீர்படுத்துவதோடு உடலை ஆரோக்கியம் உள்ளதாக ஆக்கி உணர்ச்சி நிலையையும் சமப்படுத்துகிறது.

இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்தை நன்கு இயங்க வைப்பதோடு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

புத்திகூர்மையை அதிகப்படுத்துகிறது.

நிதி நிலைமை சீராகி செல்வ வளத்தைத் தருகிறது.

வெற்றியை அடைய அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இதை அணிந்து கொண்டு லாஸ் வேகாஸில் உள்ள காஸினோ சூதாட்ட களங்களுக்குச் செல்வது பலரது வழக்கமாகும். ரேஸில் பங்கு பெறுவோரும் இதை அணிவர். ஆகவே, இதற்கு சூதாடுவோரின் கல் (GAMBLER’S STONE) என்ற பெயரும் உண்டு.

கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் இதை அணிந்தால் கவலை நீங்கி மன சாந்தி அடைவர். இதை மோதிரம், மாலை, கங்கணம் போன்றவற்றில் அணியலாம்.

இது இந்தியாவில் சென்னை மைசூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது.

தியானத்தில் இந்தக் கல் பச்சையை அணிவது வழக்கம்.

12 ராசிக்காரர்களுக்கும் உகந்த கல் இது என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்.

கல் பச்சையை அணிக! வளமாக வாழ்க!!

இதையும் படியுங்கள்:
சீனாவின் கொசு ட்ரோன்: உளவுத் துறையில் ஒரு புதிய மைல்கல்?
INDIAN JADE

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com