நலம் காக்கும் நட்சத்திர பழம்

நலம் காக்கும் நட்சத்திர பழம்
Published on

ஸ்டார் ஃப்ரூட் என்னும் நட்சத்திரப் பழம். தமிழில் விளிம்பிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட நட்சத்திர பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சரும பிரச்சனை முதல் மூல பிரச்சனை வரை அனைத்திற்கும் தீர்வை அளிக்கும்.

நட்சத்திரப் பழத்தில் உள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்தானது நம் உடலின் கொழுப்புகளையும் கரைக்கக் கூடியது. கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவதால் நமது இதய நலனும் மேம்படும்.

இந்த ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை சீசனில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட இந்த நட்சத்திர பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

ஸ்டார் பழத்தை சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.

பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால் சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.

மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

இப்பழத்தில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகளவு காணப்படுகிறது. எனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தினை தவிர்ப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com