டேட்டிங் செல்லும்போது இம்ப்ரஸ் செய்யவேண்டிய விஷயங்கள்...நோட் பண்ணிக்கோங்க!

How to impress others?
are you going to dating?Image Credits: Medium
Published on

நீங்கள் முதல்முறையாக உங்கள் பாய் ஃப்ரெண்ட் அல்லது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங் போகிறீர்களா? அப்படி என்றால் உங்களுடைய First Impression மிகவும் முக்கியமாகும். அதற்கு எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1.டேட்டிங் செல்லும்போது முதலில் கவனிக்க வேண்டியது உடை. நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ற மாதிரியான உடையை தேர்வு செய்து அணிவது நல்லது. ஒரு சிம்பிளான காபி டேட் செல்லும்போது Casual ஆன உடையணிந்து செல்லுங்கள். Fancy Restaurant க்கு செல்லும் போது கொஞ்சம் ஆடம்பரமாக டிரெஸ் பண்ணி செல்லலாம்.

2. Authentic ஆன உடையணிந்து செல்லுங்கள். எப்போதுமே நம்முடைய Personality ஐ நாம் அணியும் உடையே பிரதிபலிக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி நம்முடைய குணத்தை வெளிப்படுத்துவது போன்ற உடையணிந்து செல்வது சிறந்தது.

3.Flash ornaments, bags, Flashy accessories போன்றவற்றை அணிந்து செல்லாமல் சிம்பிளாக செல்வது நல்லது.

4.முதல் முறை செல்லக்கூடிய டேட்டிங்கிற்கு நம்மை எப்படி Groom பண்ணிக்கொண்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். Nail, teeth, hair ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேக்கப்பையும் கம்மியாக போட்டுக்கொண்டு செல்வது நல்லது.

5. எந்த உடையணிந்தால் Comfortable and confident ஆக இருக்க முடியுமோ அந்த உடையை அணிந்து செல்லுங்கள். புதிதாக எதுவும் முதல்முறை டேட்டிங்கில் முயற்சிக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
இந்த 6 பொருட்களை வைத்து கை, கால் முட்டி கருமைக்கு குட்பை சொல்லிடுங்க!
How to impress others?

6. முதல் முறை டேட்டிங் செல்லும்போது ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமாகவே இருப்பது இயற்கையான ஒன்றுதான். எனினும், அதனால் அசௌகரியமான சூழ்நிலைகளை உருவாக்காமல் சாதாரணமாக இருக்க முயற்சிப்பது நல்லது. முகபாவனை, உடல் மொழி, பேசுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம்.

7. கண்களை பார்த்து பேசுவது, புன்னகைப்பது, அவர்களின் ஜோக்கிற்கு சிரிப்பது, compliment கொடுப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களும் இம்ப்ரஸ் செய்வதற்கு உதவும். இந்த சிம்பிள் வழிகளை முயற்சித்து டேட்டிங்கில் கலக்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com