உலகின் 10 மர்மமான இடங்கள் - விஞ்ஞானிகளின் விளக்கங்கள்!

10 Mysterious places in the world
Mysterious places

உலகில் எத்தனையோ மர்மங்கள் நிறைந்துள்ளன. பல விஷயங்கள் நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் கூட குழப்பும் விதத்தில் அமைந்துள்ளன. அதன்படி 10 விசித்திரமான மர்மம் நிறைந்த இடங்களை (Mysterious places) பற்றி பார்க்கலாம். 

1. பெர்முடா முக்கோணம் 

Bermuda triangle
Bermuda triangleCredits: The daily Net

பெர்முடா முக்கோணம் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ இடையே பல கப்பல்கள் விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் நம்மை திகில் அடைய வைக்கின்றன. இதன் காரணத்தை இன்னும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. மின்னணு புவியியல் காந்தப் புலன்கள் மாற்றங்களால், கடலுக்கு அடியில் உள்ள மீத்தேன் வெடிப்பு போன்றவைகளால் நிகழலாம் என்ற அமானுஷ்யம் மட்டும் உள்ளது. இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இது ஒரு மர்மமான இடமாகப் பார்க்கப்பட்டாலும், அமெரிக்க கடற்படை மற்றும் உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களின் தரவுப்படி, மற்ற கடல் பகுதிகளை விட இங்கு விபத்துக்கள் அதிகமாக நடப்பதில்லை. இங்குள்ள புயல்கள் மற்றும் கடல் நீரோட்டங்களே விபத்துக்களுக்குக் காரணம். "மீத்தேன் வெடிப்பு" என்பது ஒரு கோட்பாடு மட்டுமே என்றும் கருதப்படுகிறது.

2. நாஸ்கோ கோடுகள் 

Nazca lines
Nazca linesCredits: Samayam tamil

நாஸ்கோ கோடுகள் பெரு நாட்டில் காணப்படும் மிகப் பிரபலமான கோடுகள் ஆகும். இந்தக் கோடுகள் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இவற்றை நிலத்திலிருந்து பார்த்தால் தெரியாது. ஆனால், வானத்திலிருந்து பார்த்தால் வெவ்வேறு வடிவங்களில் அதாவது விலங்குகள், மனித உருவங்கள், பெரிய பறவைகள், போன்ற தோற்றத்தில் புள்ளி வடிவில் மிகப் பிரம்மாண்டமாக தெரியும். கி.பி. 200 முதல் 500 வரை வாழ்ந்த நாஸ்கா மக்களால் இவை உருவாக்கப்பட்டன என்றும், நிலத்தின் மேல் அடுக்கில் உள்ள கருப்பு கற்களை அகற்றி, கீழே உள்ள வெளிர் நிற மண்ணை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வடிவங்கள் உருவாக்கப்பட்டன என்றும் நம்பப்படுகிறது.

3. மூவில் குகைகள் 

Movile Cave
Movile CaveCredits: Indian Defence Review

மூவில் குகைகள் ருமேனியா நாட்டில் உள்ள தனித்துவமான குகையாக கருதப்படுகிறது. 5 மில்லியன் ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளது. இந்தக் குகையில் ஆக்சிஜன் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இந்தக் குகையில் வாழும் உயிரினங்கள் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உருவம் மாறி காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் அங்கு செல்லப் பயப்படுவதில்லை; மாறாக, மிகவும் பாதுகாப்பான கவசங்களுடன் அங்கு சென்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

4. கோஸ்டா ரிகாவின் கல்கோளங்கள் 

The stone spheres of Costa Rica
The stone spheres of Costa RicaCredits: Green Global Travel

இந்தக் கல் கோளங்கள் முக்கியமாக தொல்லியல் துறையில் அதிசயமாக பார்க்கப்படுகின்றன. இவை பருமனாகவும் சரியான வடிவத்திலும் காணப்படுகின்றன. பெரும்பாலான கல் கோளங்கள் காடை கற்கள், பாறை கற்களால் ஆனவை. இவை இயற்கையாக உருவானவை அல்ல. கி.பி. 600 முதல் 1500 வரை வாழ்ந்த பூர்வீக மக்களால் கைவினைத் திறனுடன் செதுக்கப்பட்டவை என்றும், இவை அதிகாரத்தைக் குறிக்கவோ அல்லது வானியல் திசைகளைக் காட்டவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

5. தி டெவில்ஸ் கெட்டில் 

The devil's kettle
The devil's kettleCredits: World Atlas

அமெரிக்காவில் மின்சோட்டா மாநிலத்தில் புருல் நதியில் உள்ள அற்புதமான பகுதி. உலகின் சிறந்த இயற்கை உருவாக்கமாக கருதப்படுகிறது. இங்குள்ள கிணறு ஒரு பக்கம் மட்டும் ஆழமான குழியில் உள்ள நீரில் மறைந்து விடுகிறது. அந்த நீர் எங்கே போகிறது என்பது நீண்ட கால மர்மமாக இருந்தது. ஆனால் 2016-ல் நீரியல் வல்லுநர்கள் (Hydrologists) சாயத்தைப் பயன்படுத்திச் சோதனை செய்தனர். அந்த நீர் நிலத்தடி வழியாகச் சென்று மீண்டும் அதே புருல் (Brule) நதியிலேயே கலந்து விடுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கிணற்றின் ஒரு பகுதி மட்டும் தோன்றுவதும், மறைவதுமாக உள்ளது. இந்த மர்மம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

6. பிளட் ஃபால்ஸ் 

Blood falls Antarctica
Blood falls AntarcticaCredits: Adventure Fix

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம். இங்குள்ள நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அம்சமாகும். அண்டார்டிகாவில் உள்ள மீதார்ஷ் ஏரி முழுவதும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.  பனிப்பாறைக்கு அடியில் உள்ள நீரில் இரும்புச் சத்து (Iron oxide) அதிகம் உள்ளது. அந்த நீர் வெளியே வந்து காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது 'துரு' பிடிப்பது போன்ற சிவப்பு நிறத்தை அடைகிறது என்பது ஒரு விளக்கம்.

7. ஃபேரி வட்டங்கள் 

Fairy circles
Fairy circlesCredits: Princeton University

நமீபியாவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மர்மமான இடமாகும். இங்கு உள்ள வட்டங்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாக காணப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் வட்ட வட்டமாக காணப்படுகின்றன. இதுவும் ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராக மர்மமாக உள்ளது. மணல் கறையான்கள் செடிகளின் வேர்களை உண்பதால் இந்த வட்டங்கள் உருவாகின்றன என்றும் செடிகள் தண்ணீருக்காக ஒன்றுடன் ஒன்று போட்டியிடும்போது இயற்கையாகவே இத்தகைய இடைவெளிகள் உருவாகின்றன என்றும் நம்பப்படுகிறது.

8. Eternal Flame Falls

Eternal flame falls
Eternal flame fallsCredits: NYFalls.com

அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள நீர் பிடிப்பு பகுதி எப்போது பார்த்தாலும், எரிந்து கொண்டு இருக்கும். இங்குள்ள நீர்நிலைகள் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படுகின்றன. இதற்கு ஆராய்ச்சி முழுமை பெறவில்லை. பாறைகளுக்கு அடியில் இருந்து இயற்கையாகவே மீத்தேன் வாயு கசிந்து கொண்டிருக்கிறது. யாராவது அதை ஒருமுறை பற்ற வைத்தால், அந்த வாயு தீரும் வரை எரிந்து கொண்டே இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

9. அமைதி மண்டலம் 

Zone of silence mexico
Zone of silence mexicoCredits: Vocal Media

மெக்சிகோவின் சில்லி நாட்டின் மர்மம் நிறைந்த பகுதி ஆகும். அதே சமயத்தில் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த மண்டலத்துக்கு செல்லும்போது ரேடியோ சிக்னல்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள், கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயல் இழந்து விடும் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதையாகும் என்றாலும், விஞ்ஞான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மற்றபடி, இது ஒரு சாதாரண பாலைவனப் பகுதிதான்.

இதையும் படியுங்கள்:
புதிய சூழல்... புதிய சுவாசம்: ஏன் நாம் அடிக்கடி பயணிக்க வேண்டும்?
10 Mysterious places in the world

10. செய்லிங் ஸ்டோன்ஸ் 

Sailing stones
Sailing stonesCredits: ABC News

அமெரிக்காவில் உள்ள டெத் வேலி தேசிய பூங்காவில் உள்ளது. செய்லிங் ஸ்டோன்ஸ் என்பது ஒரு வகையான கற்கள் கொண்ட பாதை அமைப்பு. அதிக பரப்பளவு கொண்ட கற்பாதைகள் காணப்படுகின்றன. இந்தக் கற்பாதைகள் அடிக்கடி நகர்ந்து கொண்டே இருக்குமாம். அதற்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில், 2014-ல் விஞ்ஞானிகள் மர்மத்தை உடைத்தனர். குளிர்காலத்தில் கற்களைச் சுற்றி மெல்லிய பனிப்படலம் உருவாகிறது. பகலில் அந்தப் பனி உருகும்போது ஏற்படும் வழுவழுப்பான தன்மையாலும், பலத்த காற்றினாலும் கற்கள் மெதுவாக நகர்கின்றன என்ற விளக்கத்தை அளித்தனர். எனினும் ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com