எனது மாமியாா் எனக்கு திருமணமான புதிதில் (1979) நகைச்சுவையாய் சில கதைகளை சொல்லுவாா். அதில் ஒரு உலக கஞ்சப் பிரபுவின் கதை.. சிலவரிகள் எனது கற்பனையோடு..
எள்ளுக்கும் கடுகுக்கும் சிறுத்த முட்டையால (ஸ்பூன்) கால் முட்டை எண்ணெய் எதிராளாத்து பாா்வதியாண்ட கடன் வாங்கி...
தன்தலைதொட்டுத் தடவி...
தன் மக தல தொட்டுத்தடவி...
திரண்ட பொண்ணுக்கு (பூப்பெய்திய) மூணாம் நாள் திரட்டுப்பால் செஞ்சுகொடுத்து...
சடங்குக்கு வந்த சகோதரி மவ சங்கரிக்கு சக்கரசாதத்தோட, மீதமிருந்த எண்ணையில கொஞ்சம் ஊத்தி புளிக்காச்சல் செஞ்சு புளிசாதம் கிளறிக்கொடுத்து...
சந்துல உள்ள புள்ளையாா் கோயிலுக்கு அகல்விளக்குல எண்ணைபோட்டு திாிசோ்த்து தீபம் ஏத்தி...
கொழுந்தனாா் மகனுக்கு கொழுக்கட்டை செஞ்சுகொடுக்க எண்ணைய் ஊத்தி மாவு பிசைஞ்சு....
ஒன்பதுமாச கர்ப்பிணியான ஓரத்தி பொண்ணுக்கு ஓமவல்லி இலை போட்டு ஓமப்பொடி செஞ்சு கொடுத்து...
மீதி இருக்கற எண்ணையை ஈக்குமாத்து குச்சில சோ்த்துத் தடவி வாசல்ல இருக்கர மாடப் பெறைல வச்சிருந்தேனா...
என்னோட கெரகம், அந்த நேரம் பாத்து தலை கால் புரியாம ஓடி வந்த எதிா்வீட்டு நிம்முடு சுப்பு தட்டுத்தடுமாறி, எட்டிக் கொட்டி, எடக்கு மொடக்கா எண்ணையெல்லாம் சிந்திப்போச்சே....!
"அடியே! சிறுக்கி சீக்கிரமா வாடி!
சிந்துன எண்ணய வழிச்சி ரெண்டு சட்டில போட்டு முறுங்கக்கீரைய மசிச்சு எண்ணைல பாேட்டு, புள்ளைக தலைல தடவிப்போடு, பொடுகு போயிடும்.
அதோட, முளைக்கீரைய எண்ணைல வதக்கி சூப்புவச்சு, நீ மட்டும் சாப்பிட்டா, இன்னமும் எட்டு புள்ளையை பெத்தாக் கூட இடுப்புக்கு பலந்தானடி" என்றானாம் எட்டாவது புள்ளைக்கு அப்புறம் அடுத்த குழந்தைக்கு அச்சாரம் போட நெனச்ச அய்யாசாமி!
(இது முழுவதும் கற்பனை! யாரையும், யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் இல்லை ..)