

திருநங்கைகளை (Transgender) பொறுத்தவரையில் இன்றளவும் இந்த சமூகம் இவர்களை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். அவர்களை வெறுக்கிறோம், ஒதுக்கி வைக்கிறோம் இல்லை என்றால் கேலி செய்கிறோம். ஒரு சில பேர் அவர்களை பார்த்தாலே பயந்து ஓடி விடுவார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றிய சரியான புரிதல் நம்மிடையே இல்லை என்பதே ஆகும். ஆனால், எல்லா கஷ்டங்களையும் கடந்து அவர்களில் சிலரும் சாதனையையும் படைத்திருக்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பாலினத்தவர் பிறப்பு என்பது நாம் நினைப்பது போல் பேசக் கூடாத விஷயம் ஒன்றுமில்லை, பொதுவான விஷயம் தான். பிறக்கும்போது ஆணாக இருக்கும், சிலர் பிற்காலத்தில் ஆணாகவே இருப்பதில்லை. அதேபோல பிறக்கும் போது பெண்ணாக இருக்கும் சிலரும் பெண்ணாகவே இருப்பதும் இல்லை. அப்படி பட்டவர்களைத் தான் நாம் திருநங்கை அல்லது திருநம்பி என்று அழைக்கிறோம். இதை மருத்துவத்தில் AFAB மற்றும் AMAB என்று கூறுகிறார்கள். அதாவது “assigned female/male at birth” என்பதே விரிவாக்கம்.
இதற்கான அறிவியல் ரீதியான காரணத்தை பார்க்கலாமா..
பெண்களின் கருமுட்டையில் XX குரோமோசோம் மட்டும் தான் இடம் பெற்றிருக்கும். ஆனால், ஆண்களின் விந்தணுவில் XY குரோமோசோம்கள் இருக்கும். அதில் எந்த குரோமோசோம் கருமுட்டையுடன் இணையுமோ, அதுவே குழந்தையின் பாலினமாக அமைகிறது. ஒரு கரு உருவாகி 7ஆவது வாரத் திலிருந்து, 12-ஆவது வாரத்துக்குள் அது ஆணா இல்லை பெண்ணா என்பது முடிவாகிறது.
ஒரு பெண்ணின் x குரோமோசோமும் ஆணின் x குரோமோசோமும் இணையும் போது, பெண் கரு உருவாகிறது. அதே சமயம் ஒரு பெண்ணின் x குரோமோசோமும் ஆணின் y குரோமோசோமும் இணையும் போது ஆண் கரு உருவாகிறது. இது தான் இயல்பாக நடக்கும்.
ஆனால், மாறாக சில சமயங்களில், XY குரோமோசோம் கொண்ட சில குழந்தைகளுக்கு, Y குரோமோசோம் 7 வாரங்களை கடந்த போதும் பாலின உறுப்பு வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தைக்கு பெண்ணுறுப்பு வளரத் தொடங்கும். அந்த குழந்தை பிறக்கும் போது நமக்கு பெண் குழந்தையாகவே தெரியும். ஆனால் அந்த குழந்தைகள் வளர வளர ஆண்களின் குணம் வெளிப்படும். அவர்கள் தான் திருநம்பி என்று அழைக்கப் படுகிறார்கள்.
அறிவியலின் படி வளர்ச்சிதை மாற்ற கோளாறும் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மரபணு கோளாறுகள் காரணமாகவும் திருநங்கைகள் உருவாகுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது பாலியல் குரோமோசம்களை தாண்டி நடக்கும் நிகழ்வு ஆகும். கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்புக்கள் ஒரே திசுக்களில் இருந்து உருவாகின்றன.
இந்த நேரத்தில் ஆண் குறி தெளிவாக உருவாகும் போது ஆண் இனப்பெருக்க திசு அதிக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இருப்பினும் விந்தணுவும் ஆண் குறி சிறுநீர் குழாயும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையாக உருவாகிறது. இந்த செயல்முறை நடக்கும் போது பிறப்புறுப்பு உருவாக்கம் தெளிவாக இருப்பது கிடையாது.
ஆண் இனப்பெருக்க உறுப்பு முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்பே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக சிறிய ஆண்குறி மற்றும் விந்தணுக்களுடன் பெண்கள் பிறக்கிறார்கள். இவர்கள் தான் திருநங்கை என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
குரோமோசோம்களில் ஏற்படும் இந்த கோளாறுகளின் விளைவாக தான் மூன்றாம் பாலின கரு உருவாகிறது. ஆகவே, இதில் அவர்களின் தவறு எதுவும் கிடையாது. இந்த மரபணு மற்றும் குரோமோசோம்களில் இயற்கையாகவே ஏற்படும் கோளாறுகளின் காரணமாக தான் இந்த மூன்றாம் பாலினம் உருவாகிறது. அவர்களையும் நேசிப்போம்!!!