Vitamin B12 - இந்த 9 வகை பானங்களில் நிறையவே இருக்கு! ஆனால்..!

Vitamin B12 juices
Vitamin B12 juices
Published on

நம்மில் நிறைய பேருக்கு வைட்டமின் B12 இன் அளவு குறைந்தோ அல்லது எல்லைக் கோட்டிலோ இருக்கும். அதே போல் ஒரு சிலருக்கு B12 ஒவ்வாமை இருக்கும். அப்படிப்பட்டவர்களால் இதனை மாத்திரையாகவோ அல்லது ஊசி மூலமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. 

வைட்டமின் B12 நம் உடலில் உள்ள எலும்பு, ரத்தம், நரம்பணுக்களை பராமரிக்க உதவுகிறது. மேலும் நம் மரபணுவை உற்பத்தி செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. 

பொதுவாகவே வைட்டமின் B12 இன் அளவை நாம் உட்கொள்ளும் உணவால் பராமரிக்க முடியும். உதாரணமாக முட்டை, பால், தயிர், சீஸ், சிக்கன், மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த பதிப்பில் வைட்டமின் B12 இன் பராமரிக்க இந்த 9 வகை பானங்களைப் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.

பால்: பாலில் இயற்கையாகவே வைட்டமின் B12 அதிகம் உள்ளது. இதனைப் பருகுவதால் நம் உடலில் B12 அளவினை பராமரிக்க இயலும்.

தயிர்: தயிர் மிகச் சிறந்த வைட்டமின் B12லின் ஆதாரமாகும். பாலிலிருந்து கிடைக்கும் தயிரில் வைட்டமின் B12 அதிகம் உள்ளது. இதற்குக் காரணம் தயிரில் உள்ள லாக்டோ பசிலஸ் பாக்டீரியா உற்பத்தி செய்யும் B12வும் சேர்ந்து காணப்படுவது ஆகும். 

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட் பொதுவாகவே நம் உடலிற்கு நல்லது. அதனை ஜூஸாக பருகும்பொழுது செரிமானத்தைத் துரிதப்படுத்தி நம் உணவில் உள்ள B12லினை வேகமாக ரத்தத்தில் உறிஞ்சிக்கொள்ள உதவும்.

கேரட் ஜூஸ்: கேரட் இயற்கையாகவே வைட்டமின் B நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். கேரட்டை ஜூஸாக பருகி வந்தால் பிற சத்துக்கள் ரத்தத்தில் ஏறுவதுடன் B12 அளவும் ஏறும்.

ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் பழம் இயல்பிலேயே வைட்டமின் B12 நிறைந்தது. எனவே ஆப்பிள் ஜூஸை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது நம் உடலிற்கு நல்லது. இதனால் இயற்கையாகவே நம் ரத்தத்தில் B12 அளவு கூடும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவமனையில் மருத்துவர் முதலில் நமது நாக்கை ஏன் பார்க்கிறார் தெரியுமா? 
Vitamin B12 juices

வாழைப்பழ ஷேக்: வாழைப்பழம் பொதுவாகவே சத்துக்கள் நிறைந்தவை, அதிலும் வைட்டமின் B12 அதிகம் நிறைந்த ஒரு பழ வகையாகும். அதனைப் பாலுடனோ அல்லது வெறும் பழமாகவோ ஜூஸ் செய்து குடித்தால் B12 மிக வேகமாக உடலில் எற உதவும்.

ஆரஞ்சு ஜூஸ்: பொதுவாகவே புத்துணர்ச்சி ஊட்டுபவை ஆரஞ்சு பழங்கள். அப்படிப்பட்ட ஆரஞ்சு பழம் வைட்டமின் C மற்றும் B12 நிறைந்தது. இதனைச் சாறாக்கிக் குடிப்பதால் உடலிற்குத் தெம்பு, புத்துணர்ச்சி மற்றும் சத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் C உடம்பில் B12 முழுமையாக ஏற்றுக்கொள்ள உதவுகிறது.

மாம்பழ ஜூஸ்: பழங்களின் ராஜாவான மாம்பழம் நார்ச் சத்துடன் பிற வைட்டமின், தாது சத்துக்களும் நிறைந்த பழமாகும். இதில் வைட்டமின் B12 அடக்கம். மாம்பழத்தைப் பாலுடன் சேர்த்துக் குடிக்கும்பொழுது கூடுதல் பலன் கிடைக்கின்றது.

மாதுளம் பழம்: மாதுளம் பழத்தில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. இதனால் வைட்டமின் B12 ஐ அதிக அளவு நாம் உண்ணும் உணவிலிருந்து உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. எனவே உடனடி சக்தி பெறுவதற்கு மாதுளம் பழத்தின் சாற்றைக் குடிப்பது பலன் தரும்.

கவனிக்க: இவ்வாறாக நாம் எடுத்துக்கொள்ளும் ஜூஸ் எதுவாக இருந்தாலும் முடிந்தவரைக் கூடுதல் சர்க்கரை இடாமல் பழங்களின் இயற்கையான சுவையை ரசித்துக் குடித்தால் அது நம் உடலிற்குக் கூடுதல் பலன் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com