நமக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் நம்மை பரிசோதிக்கும் முதல் உறுப்புகளில் ஒன்று நாக்குதான். அது நம் உடலின் பல்வேறு உறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. இந்தப் பதிவில் மருத்துவர்கள் ஏன் நாக்கை முதலில் பார்க்கிறார்கள் என்பதற்கான முழு விளக்கத்தைப் பார்க்கலாம்.
நாக்கு என்பது நம் உடலின் அனைத்து உறுப்புகளுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கும் ஒரு உறுப்பு. நாக்கு மேற்பரப்பில் உள்ளே நுண்ணிய சுவை மொட்டுகள், வெவ்வேறு சுவைகளை உணரும். ஆனால், அதைத்தாண்டி நாக்கின் நிறம், வடிவம், அதில் படிந்திருக்கும் விஷயங்கள் போன்றவை நம் உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லும்.
நாக்கின் நிறம்: நாக்கின் நிறம் சிவப்பாக இருந்தால் அது காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு, விட்டமின் குறைபாடு போன்றவற்றை குறிக்கும். அதேபோல வெள்ளை நிற பூஞ்சைத் தொற்று, வாய் புண், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றின் அறிகுறியாகும். மஞ்சள் நிறம், பித்தப்பை, கல்லீரல் பிரச்சனையையும், கருப்பு நிறம் பாக்டீரியா தொற்று, நீரிழிவு நோய் போன்றவற்றையும் குறிக்கலாம்.
நாக்கின் வடிவம்: நாக்குகளில் அதிகமாக வெடிப்பு இருந்தால் இது விட்டமின் குறைபாடு அல்லது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கும். நாக்கு வீங்கி இருந்தால், அலர்ஜி, தொற்று, விட்டமின் குறைபாடு போன்றவற்றால் ஏற்படலாம்.
நாக்கின் பூச்சுகள்: நாக்கில் வெள்ளை நிற பூச்சுகள் இருந்தால் அது வாய்ப்புண், பூஞ்சை தொற்று போன்றவற்றால் ஏற்படும். மஞ்சள் நிற பூச்சுகள் பித்தப்பை பிரச்சினை, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றால் ஏற்படும்.
மருத்துவர்கள் நாக்கை ஏன் பார்க்கிறார்கள்?
நாக்கின் தோற்றத்தை வைத்து பல நோய்களை துல்லியமாகக் கண்டறிய முடியும். உதாரணமாக சிவப்பு மற்றும் வீங்கிய நாக்கு தொற்று அல்லது அலர்ஜியை குறிக்கும். சில மருந்துகள் நாக்கில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நாக்கை பரிசோதிப்பது மூலம் மருத்துவர் மருந்தை மாற்றிக்கொடுக்கும் வாய்ப்புள்ளது.
சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு நாக்கில் வீக்கம் மற்றும் பூச்சுகள் ஏற்படலாம். நாக்கின் தோற்றம் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துவதால், மருத்துவர்கள் அதை முதலில் பரிசோதிக்கின்றனர். ஒரு ஆரோக்கியமான நாக்கு என்பது பொதுவாக இளஞ்சிவப்பு நிலத்திலும், அதன்மேல் எந்த பூச்சுகளும் இல்லாமல் இருக்கும்.
உங்கள் உடல்நிலை குறித்து உடனடியாக தெரிந்து கொள்வதற்காகவே மருத்துவர்கள் நாக்கை முதலில் பார்க்கிறார்கள்.