Wellness Carnival: மக்கள் நலம் காக்கும் திருவிழா! என்ன? எங்கே? எப்போது? யார் நடத்துவது?

Wellness Carnival
Wellness Carnival
Published on

Healthy You Happy You என்ற தலைப்பில் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் மெடராஸ் டெம்பிள் சிட்டி (Rotary Club of Madras Temple City) ஆதரவில் நடைபெறும், குடும்பம் முழுமைக்கும் நலம் காக்கும் திருவிழாதான் WELLNESS CARNIVAL.

இத்திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம். அனுமதி இலவசம். சிறந்த பொழுதுபோக்காகவும், நலம் பேணும் நல்திருவிழாவாகவும் அமையும். இந்நிகழ்ச்சியில் போட்டிகளும் உண்டு!

வரும் மார்ச் 17ம் தேதி, ஞாயிறன்று, சென்னை சி.பி ஆர்ட் சென்டரில் காலை 9.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற  இருக்கும் இவ்விழாவில், உடலும் மனமும் நலமாக இருக்கத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள்.

(Wellness Products and Services), கண்காட்சி (Exibition), கருத்தரங்கங்கள் (Seminars) பொதுமக்கள் குடும்பத்தோடு பங்கு பெறும் உற்சாகப் போட்டிகள், சிறுதானியங்கள் சமையல் போட்டி, குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்ச்சிகள், நடனம், என்று உடல்நலம் மற்றும் மன நலம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நாள் முழுவதும் நடைபெறும் இசை நிகழ்ச்சியும் உண்டு கண்காட்சியில்.

Wellness Carnival...
Wellness Carnival...

* இயற்கை சமையல் பாத்திரங்கள் (Natural Cookware),

* யோகாவுக்கான பொருட்கள்,

* உடலுக்கு இதம் தரும் துணி வகைகள்,

* உடற்பயிற்சி மையம், (Fitness Centres)

* சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்கள்,

* சுற்றுப்புற சூழல் காக்கும் பொருட்கள் ,

* குழந்தைகளின் நலனுக்கான பொருட்கள்
உட்பட பல ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

* சிரிப்பு யோகா பயிற்சி (Laughing Yoga Therapy),

* எது உடலுக்குத் தேவையான உணவு, எது தவிர்க்கப்பட வேண்டியது என்பதை வலியுறுத்தும் (Mindful Munching),

Wellness Carnival...
Wellness Carnival...

* தேவையான தூக்கம்,  
* முதியோர் நலம்,

* கண்களின் பாதுகாப்பு,

* நல வாழ்வுக்கு சித்த மருத்துவம் (Siddha Way of Life),

* கலைகள் மற்றும்  விளையாட்டுக்கள் மூலம் உடல், மன நலம்,

* அக்குபஞ்சர் (Acupunture),

* வாசனை சிகிச்சை (Aroma Therapy),

* தியானம் (Mindful Meditation) போன்ற பல தலைப்புகளில் நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் உண்டு!

லக்கி டிரா என்னும் அதிருஷ்டப் பரிசும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ந்த விழாவை, சென்னை காவேரி மருத்துவமனை, சத்தியபாமா பல்கலைகழகம், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா ஸ்வாமி கண் மருத்துவமனை, ஜி.ஆர்.பி. நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கேரளா ஸ்பெஷல் சர்க்கரை உப்பேரி செய்யலாம் வாங்க!
Wellness Carnival

இவ்விழாவின்   மீடியா பார்ட்னராக, kalkionline.com  இணைந்துள்ளது பெருமிதத்துக்குரிய விஷயம்.

அனைவரும் வருக! குடும்பத்துடன் வந்து பயன் பெருக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com