நீ என்ன பெரிய புடலங்காயா?

நீ என்ன பெரிய புடலங்காயா?
Published on

நீ என்ன பெரிய புடலங்காயா என்பார்கள்... ஏன் அப்படிச் சொல்கிறார்கள் இன்றுவரை யாராவது சிந்தித் திருக்கிறோமா? பெரிய என்ற சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. ஆம், புடலங்காயில் அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. 

* புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

* புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து, கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

* எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இது, உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

* அதிக உடல் சூட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து, அதனுடன் அதே அளவு கொத்துமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்துவந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

* இதயக் கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

* புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து, சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்துவந்தால், மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

* புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட, நரம்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்குக் கிடைக்கும்.

* கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250 கிராம் எடுத்து 300 மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி 200 மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும். இனி, மார்க்கெட்டில் புடலங்காயைப் பார்த்தால் விடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com