காலையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் இது தான்!

காலையில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் இது தான்!

உணவு என்பது மனிதர்களின் அத்தியாவசியமாகும். முந்தைய காலங்களில் உணவு வகைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால் தற்போது ஒவ்வொருவரும் வேலை என வேகமாக ஓடுவதால் உணவில் அக்கறை செலுத்துவதில்லை என்றே சொல்லலாம். பொதுவாகவே ஒரு நாளை ஆரம்பிக்கும் போது நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் நம் நாளை நம்மை ஆரோக்கியமாக வைக்கும். சில உணவுகள் அதிகாலையிலோ அல்லது எழுந்ததும் சாப்பிடுவதால் நமக்கு அஜீரன கோளாறு ஏற்பட்டு அந்த நாளே நாம் முடியாமல் போய்விடும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. அப்படி நாம் காலையில் சாப்பிட கூடாத உணவுகள் பட்டியலை பார்க்கலாம்.

தயிர்:

சளி உருவாவதற்கு காரணமாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுவதால் காலையில் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லதாகும். சிலர் எழுந்ததும் வெயிட் போடுவதற்காக கூட தயிரை சாப்பிடுவார்கள். ஆனால் சளி ஏற்படும் என்பதால் அவற்றை காலையில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அது இல்லை என்றால் தாளித்து கூட எடுத்து கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

குளிர்ந்த நீர்:

பலருக்கும் தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சிக்காகவோ, உடலை ஜில் என்ற உணர்ச்சியை உணர்வதற்காகவோ ப்ரிட்ஜை திறந்து அப்படியே ஐஸ் வாட்டரை பருகுவார்கள். அது மிகவும் ஆபத்தானதாகும் என்பது பலருக்கும் தெரியாது. இது உடலில் வெப்பம் மற்றும் ஆற்றல் அளவை தொந்தரவு செய்கிறது.

வறுத்த உணவு:

காலையில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் நாள் முழுவதும் செரிமானத்தை மெதுவாக வைத்திருக்கும். டீ, வடையை மட்டுமே காலை உணவாக எடுத்து கொள்பவர்கள் பலரும் உண்டு. இதனை தவிர்ப்பது சிறந்ததாகும்.

சமைக்கப்படாத உணவு:

பச்சை உணவு எடுத்து கொள்வதால் ஜீரணிக்க நேரம் எடுக்கும். காலையில் அவற்றை சாப்பிடுவதால் செரிமான அமைப்பை மெதுவாக்கிறது.

சர்க்கரை பானங்கள்:

பொதுவாகவே எழுந்ததும் காபி, டீ குடிப்பது வழக்கமான ஒன்றுதான். இதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதே முக்கிய காரணங்களில் ஒன்றாகும்

பதப்படுத்தப்பட்ட உணவு:

முதல் நாள் வைத்த உணவை பிரிட்ஜில் பாதுகாத்து மறுநாள் சாப்பிடுவது நல்லதல்ல. இதனால் உடல் பருமன், தொற்று நோய், இதய நோய் மற்று நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பழச்சாறு:

காலையில் அதிக அமிலத்தன்மை கொண்ட சாறுகள் வயிற்றின் செரிமான நொதிகளை கொல்லும் என சொல்லப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட மாவு:

சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை, ஆனால் நிறைய கலோரிகள் உள்ளன.

காரமான உணவு:

வெறும் வயிற்றில் காரமான உணவு சாப்பிடும் போது வயிறு வலி உண்டாகும். மேலும், அது அமிலத்தன்மை அளவை பாதிக்கிறது.

ஊக்க பானம்:

பெரும்பாலனோர் தற்போது எனெர்ஜி ட்ரிங்க்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இது ஆற்றலில் தற்காலிக எழுச்சியை மட்டுமே கொடுக்கிறது. அதில் உள்ள சர்க்கரை நல்லதை விட தீங்கே அதிகம் விளைவிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com