எது அழகு?

sun set...
sun set...

பெண்ணின் அழகைவிட இயற்கைதான் அழகா? அல்லது பெண்ணின் நற்குணமே அழகா? எது அதிக அழகு? 

காலைப் பொழுதில் உதிக்கும் கதிரவன் அழகு. விண்ணில் உலா வரும் வெண்ணிலவும் அழகு. மரக்கிளைகள் காற்றில் ஆடுவது அழகு. கிளைகளில் பூத்திருக்கும் பூக்கள் அழகு. கீழே கொட்டிக் கிடக்கும் காய்ந்த இலைச் சருகுகளும் அழகு. இயற்கைதான் எத்தனை அழகு.

குயில் பாடும் பாட்டும் மயில் ஆடும் ஆட்டமும் அழகு. இதம் தரும் குளிர் காற்று அழகு என்றால் வெயிலின் சுடுதலும் அழகு. பச்சைக் குழந்தையின் விரல்போல் ஒட்டி வருடும் தென்றலும் அழகு.

பச்சைப் பசேல் என பட்டுப் பாய் போன்ற புல்வெளி, புல்வெளியில் பரந்து விரிந்து விளையாடும் பறவைகளும் அழகு.

பெண்ணின் அழகுக்கு அளவுகோல் ஏதுமுள்ளதா என்ன?? எதனுடன் ஒப்பிட முடியும்??

‘குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூவம் அன்று’

வேறு எந்த அழகும் அழகல்ல‌. நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கு அழகாகும். வள்ளுவரின் எடுத்துக்காட்டு.

அந்த நற்பண்பு மட்டுமே பெண்ணிடம் உள்ள உண்மையான அழகு.

ஒரு பெண் பக்குவமாக நடந்துகொள்வதில் பெண்மை வெளிப்படுகிறது. அதுவே அவளை அழகாக்குகிறது அல்லவா.

அழகு காலையிளம் பரிதியிலே அவளைக்கண்டேன். கடற்பரப்பில் ஒளிப்புலனைக் கண்டேன். மாலையிலே மேற்றிசையில் இலகுகின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள். ஆலஞ் சோலையிலே கிளை தோறும் கிளி் கூட்டந்தன்னில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்….

அழகைப் பற்றி பாரதிதாசன் கூறியது.

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத அறநெறிகளும் திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்’ என்று பெண்ணின் அழகை பாடினான் பாரதி.

தாய்மை...
தாய்மை...

குழந்தைக்கு தாய் அழகு. தாய்க்கு தாய்மைதான் எத்தனை அழகு. அம்மாவின் அழகை ரசிக்கும் குழந்தையின் பார்வை அழகு.

குளித்த ஈரத் தலையுடன் தலையை முடிந்துகொண்டு புருவ மத்தியில் அம்மா வைக்கும் குங்குமம்தான் எத்தனை அழகு.

அம்மா சேலை கட்டும் அழகே அழகு.

சேலையில் வரும் அம்மாவின் வாசமும் அழகு.

ஆசையுடன் அம்மா தரும் முத்தமும் அழகு.

செல்லமாக கன்னத்தைத் தட்டும் அம்மாவின் சின்ன அடியும் அழகே...

முகத்தில் கொட்டும் வியர்வையை ஒற்றைக்கையால் துடைத்தபடி சேற்றில் நாற்று நடும் பெண்கள்தான் எத்தனை அழகு.

இயற்கையை மிஞ்சி விடும் அந்த அழகிற்கு அகராதியில் பொருள் இல்லை.

ஓராயிரம் ஒப்பனை செய்து ஒய்யாரமாக  நடந்துவரும் உலக அழகியும் அழகுதான். எந்த அழகும் நம் பெண்களின் இயற்கை அழகிற்கு ஈடாகுமா என்ன. பெண்ணின் விழிகள் மலர்கள் என்றால் மலர்கள் பேசுமா? ஆனால் விழிகள் ஆயிரம் வார்த்தைகள் கவிதைகளாக கொஞ்சி கொஞ்சி பேசுகின்றனவே!

இதையும் படியுங்கள்:
ஆணவம் அறிவை அழிக்கும்; அகம்பாவம் நம்மையே அழிக்கும்!
sun set...

எனினும், பெண்ணின் நற்குணம் அழகா? இயற்கைதான் அழகா? நற்குணங்கள் கொண்ட பெண் அழகுதான். ஆனால், கலப்படம்...

கலப்படம் இல்லாத அழகு எது என்றால் இயற்கைதான். இயற்கை அழகிற்கு முன் எதுவுமே அழகு என்று அகராதியில் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com