

சங்க காலம் முதல் தமிழருக்கு இரண்டு கண்கள். ஒன்று வீரம், இரண்டு காதல். ஆம். காதலுக்கு(Love) ஒரு பெரிய சரித்திரமே உண்டு. வள்ளுவர் இரண்டு ஆயிரம் ஆண்களுக்கு முன்பே “காமத்து பால்“ என்று ஒரு தனி பிரிவையை எழுதினார்.
அவர் காதல் பற்றி எழுதியது கொஞ்சம் அல்ல. காதலை பல்வேறு கோணங்களில் எழுதி தள்ளினார். காதலில் உள்ள அன்பு, நேசம், பிரியம் மற்றும் ஊடல், பிரிவு என்று எழுதாத விஷயம் இல்லை. இன்றும் அவர் காதல் படிக்க மிகவும் சுவையாக இருக்கும்.
அதைப்போல சிலம்பில் கோவலன், மணிமேகலை மீது கொண்ட காதல் ஆபூர்வம். கோவலன் செய்தது தவறு. பின்னர் தன் தவறை உணர்ந்தான். ஆனால், கண்ணகி கற்பு தெய்வம். அவள் கோவலன் மீது தீராத காதல் கொண்டு இருந்தார். தனது கணவன் மீது திருட்டு பட்டம் வந்து போது கொதித்து எழுந்து மதுரையை எரித்தார். அவ்வளவு காதல். தமிழ் நாட்டில் கண்ணகியை வழிபடும் மக்கள் உண்டு.
பிறகு கம்பர் காலத்தில் அம்பிகாபதி, அமராவதி காதல் கதை உலகமே அறிந்த ஒரு உண்மை. இரமாயணத்தில் ராமர், சீதையை கண்டவுடனே காதல் கொண்டார். அதேபோல் சீதாவும் ராமர் மீது காதல் கொண்டார். “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்“ என்ற கம்பன் வார்த்தைகள் எல்லோராலும் விரும்பப்பட்டது.
காதல் கல்யாணம் மிக பழசு. ஆதி காலத்தில் 'கந்தர்வ கல்யாணம்' என்று இருந்தது. முருகன் வள்ளியை கந்தர்வ கல்யாணம் தான் செய்து கொண்டார். இங்கு ஒன்று சொல்ல வேண்டும். தமிழில் காதல் என்பதற்கு ஒரே அர்த்தம் தான். ஆம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புவது தான் அர்த்தம்.
ஆனால் ஆங்கிலத்தில் காதலுக்கு 'லவ்' என்று சொல்கிறார்கள். லவ் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. காதல், அன்பு, நேசம், பாசம் மற்றும் பிரியம் என்று பல்வேறு இடங்களில் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சரியாகப் புரிந்து கொள்ள ஒரே ஒரு வாக்கியம், “ஐ லவ் மை மாம் “ என்று சொல்லும் போது “ லவ்” காதலை குறிக்கவில்லை. அதீத பாசத்தை தான் குறிக்கிறது. "நான் என் அம்மாவை காதலிக்கிறேன்" என்பது மிகப் பெரிய தவறு. இன்னும் ஒரு உதாரணம். “ஐ லவ் புக்ஸ்“ இது புத்தகங்கள் மீது உள்ள பிரியத்தை தான் குறிக்கிறது.
தமிழில் மட்டுமே லவ் என்பது காதல். இந்த வார்த்தை தமிழுக்கு பெருமை சேர்க்கிறது. காதல்..காதல்.. காதல்... காதல் இல்லையேல் சாதல்..சாதல்..சாதல்..! என்று மகாகவி பாரதியார் சொன்னார். அவர் காதலை மிகவும் நேசித்தார். அதனால் தான் காதலை முக்கிய இடத்தில் வைத்தார்.
ஆம். காதல் ஒரு வரபிரசாதம். எல்லோரும் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் காதலிக்க வேண்டும். காதலில் உறுதி இருந்தால், பிறகு என்ன? டும் டும் டும் தான்!