சீனாவில் பிரபலமாக இருக்கும் Man mums ... இந்தியாவுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா?

Man mums
Man mums
Published on

தற்போது உள்ள காலக்கட்டத்தில் மனஅழுத்தம் இல்லாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ எல்லோருக்குமே ஏதோ ஒருவித கவலை இருக்கிறது.

இதனால் தேவையில்லாத ஸ்ட்ரெஸ், டென்ஷன் ஆகியவற்றை மனதிலேயே பூட்டி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். இத்தகைய மனஅழுத்தத்தை போக்க சீனாவில் டிரெண்டாகி வருகிறது Man mums. அது என்ன Man mums என்று கேட்கறீங்களா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

சீனாவில் உள்ள பெண்கள் தங்கள் மனஅழுத்தத்தை போக்க கனிவான, அன்பான குணங்களைக் கொண்ட திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்ட ஆண்களை ஐந்து நிமிடத்திற்கு கட்டியணைத்து தங்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்கிறார்கள்.

இது கட்டணத்தின் அடிப்படையில் நடக்கிறது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் கட்டிப்பிடி வைத்தியம்.

இது ஒரு சாட் ஆப் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பொதுவான இடமான காபி ஷாப், Mall போன்ற இடங்களில் பாதுகாப்பான முறையில் இந்த கட்டிப்பிடி வைத்தியம் நடக்கிறது.

இவ்வாறு செய்வதை பெண்கள் ஒரு Emotional relief ஆக கருதுகிறார்கள். இதனால் அவர்கள் பாதுகாப்பான உணர்வு கிடைப்பதாத கூறுகிறார்கள். இதற்காக சீனபெண்கள் ஐந்து நிமிடத்திற்கு 20 முதல் 50 Yuan கட்டணமாக செலுத்துகிறார்கள். அதாவது இந்திய ரூபாயில் 200 முதல் 600 ரூபாய் ஆகும்.

இது காதல் சார்ந்த அல்லது சிகிச்சை சார்ந்து செய்யப்படவில்லை. தனிமையிலும், அதிக மன அழுத்தத்திலும் இருக்கும் பெண்களுக்கான Emotional support ஆக கருதப்படுகிறது.

இந்த கட்டிப்புடி வைத்தியம் மிகவும் பாதுகாப்பான மற்றும் மரியாதையான முறையிலேயே நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த சேவை சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பேசும் பொருளாகவே இருக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கட்டிப்புடி வைத்தியம் இந்தியாவிலும் விரைவில் வருவதற்கு வாய்ப்புள்ளதா? இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
மழைப்பொழிவில் எத்தனை விதங்கள் உள்ளன தெரியுமா?
Man mums

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com