கொரியர்களின் வெற்றிக்குக் காரணம் இந்த ஒரு வரி ரகசியம்...

 korean quotes meaning
korean quotes one-line success secret
Updated on
MM strip
MM strip

கொரிய மக்களின் பண்பாட்டில் ஊறியதும், பரம்பரை பரம்பரையாக அனைவராலும் பின்பற்றப்பட்டு வருவதுமானதொரு சாதாரண பழமொழி, "இரண்டு பேர் சேர்ந்து தூக்கும்போது, ஒரு சிறிய பேப்பர் கூட மேலும் கனமில்லாதது ஆகிவிடும்" (Even a sheet of paper is lighter when two people lift it together" என்பதாகும்.

இன்றைய பரபரப்பான சூழலில் மக்கள் அனைவரும் பிரச்னைகளை தானே கையாண்டு கொள்ளும் திறனுடனும், சுதந்திர உணர்வோடும் தன்னிறைவுடன் வாழவே விரும்புகின்றனர். இது அவர்களின் பொறுப்புணர்வையும் மன உறுதியையும் காட்டுவதாக உள்ளது. எனினும் இந்த முறையில் மன அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்பும் உண்டு.

பழங்கால பழமொழிகள் சிம்பிளாக இருந்தபோதும் அவை நமக்கு சிறந்த பாடம் கற்பிப்பதாகவும் உள்ளன. மேலே கூறிய பழமொழி, பலர் சேர்ந்து ஒரு வேலையை செய்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சின்ன வேலையாக இருந்தாலும் அதை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து முடிக்கையில், இணைந்து செயல்படுவதின் பலமும் மதிப்பும் தெரிய வரும். ஒருவருக்கொருவர் உதவி புரிவது பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்து அதை சுலபமாக்கும். வேலைகள், கவலைகள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது ஸ்ட்ரெஸ் குறையும்.. மனம் ரிலாக்ஸாகும்.

சிம்பிளான இந்தக் கொரியன் பழமொழி உணர்த்தும் ஆழ்ந்த உள் அர்த்தங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்:

1. பலர் சேர்ந்து ஒரு வேலையை செய்யும்போது அந்த வேலை சுலபமாகும். பங்கு பெறும் ஒவ்வொருவரும் குறைந்த அளவு சக்தியை கொடுத்தாலே போதுமானது.

2. பொறுப்புகள் பகிரப்பட்டுவிடும்போது வேலையின் தரம் உயரும். வேலை சிறந்த முறையில் முடிக்கப்படும்.

3. பிறர் உதவியை நாடுவது இயலாமையின் அறிகுறி அல்ல. புத்திசாலித்தனத்துடன் வேலையை செய்து முடிக்கப் பின்பற்றும் வழியாகும்.

4. பலர் சேர்ந்து ஒரு வேலையை செய்வதால் பங்கு பெறும் ஒவ்வொருவரின் தனித் திறமையும் பலமும் அதில் பிரதிபலிக்கும்.

5. பிறர் உதவியை நாடுவது ஸ்ட்ரெஸ் குறையவும், கடினமான சூழலை சுலபமாக கையாளவும் வழி வகுக்கும்.

6. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து செயலாற்றும்போது உறவு வலுப்பெறும். நம்பிக்கை வளரும்.

7. தனி நபர் ஒரு வேலையை எடுத்துச் செய்யும்போது மன அழுத்தமும் அலுப்பும் உண்டாவது சகஜம்.

8. குழுவாக ஒரு வேலையை செய்யும்போது அந்த வேலையை எந்த தடங்கலுமின்றி சீராகவும் விரைவாகவும் செய்து முடிக்க முடியும்.

9. பலர் சேர்ந்து ஒரு வேலையை செய்யலாம் என்ற முடிவை எடுக்கையில் அது அவர்களுக்கு சிறப்பான, சிக்கலில்லாத ஒன்றை தேர்ந்தெடுக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ராமர் சேது பாலம்: உண்மையிலேயே ராமர் கட்டியதா?
 korean quotes meaning

10. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்கையில் அந்த வெற்றி நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.

இன்றைய நவீன கலாச்சாரத்திலும் டீம் ஒர்க்கே வெற்றிக்கு வித்திடுகிறது. தனி ஆளாக ஒரு வேலையை செய்ய நினைத்தால் அது சோர்வையும் மன அழுத்தத்தையும் தந்து உற்பத்தித் திறனைக் குறையச் செய்யும்.

இந்தப் பழமொழி கொரிய நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. உலகின் அனைத்து நாட்டு மக்களும் பின் பற்றத் தகுந்தது.

logo
Kalki Online
kalkionline.com