மெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க?

Medu vada
Medu vada
Published on

நாம் மெது வடையை பார்க்கும் போதெல்லாம், அதாவது உளுந்து வடையை பார்க்கும் போதெல்லாம், உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுறாங்கன்னு மனதிற்குள் கேள்வி வந்து போகும். நம்ம தளபதி நடிகர் விஜய் கூட, தான் நடித்த மதுர திரைப்படத்தில் குடித்துவிட்டு இது குறித்து கலாய்த்திருப்பார்.

மெதுவடையில் ஓட்டை போட காரணம், உளுந்து மாவு பிசுபிசுப்பாக இருப்பதால் கொஞ்சம் தடிமனா வடை பொறித்தால் சீக்கிரத்துல வேகாது. அதனால, சீக்கிரம் வேக வடை தட்டும்போது ஓட்டை போடுவார்கள். அந்த ஓட்டை வழியாவும் எண்ணெய் உள்ள போய் சீரா வேகும்.... இதுதான் மெது வடையில் ஓட்டை போட காரணம். என்ன ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டீர்களா? சரி இப்போ உளுந்துக்கு வருவோம்...

உளுந்து அல்லது உழுந்துன்ற செடியில் இருந்துதான் உளுத்தம்பருப்பு கிடைக்கிறது. உழுந்து என்பது சங்க இலக்கியங்களில் உளுந்தின் பெயராகும். இது தெற்காசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த உளுத்தம்பருப்பு. இந்தியர்களின், குறிப்பாக தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது.  இட்லி, தோசை, வடை, முறுக்கு, களின்னு தமிழர் உணவுகளில் உளுத்தம்பருப்பு இடம் பெற்றுள்ளது.

தோல் நீக்கிய உளுத்தம் பருப்பைவிட, தோல் நீக்காத கருப்பு உளுந்தில் சத்துகள் அதிகம் உள்ளது. நீண்ட நாள் நோயின் தாக்கத்திலும், மருத்துவமனையிலும் இருந்து வந்தவர்கள் உடல் பலம் பெற இப்பருப்பு பெரிதும் உதவுகிறது.  கஞ்சியாகவும், களியாகவும், இட்லியாகவும் எந்த வயதினரும், எந்த நோயின் பிடியிலிருந்தாலும் உட்கொள்ளலாம். எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து பெரிதும் பயன்படுகிறது.

பொதுவாய் உளுந்து நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் குளிர்ச்சியை தரக்கூடியது. கருப்பு உளுந்துடன், தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் சாப்பிட்டால், தூக்கமின்மை, ஓயாத உழைப்பு, மன உளைச்சலால் வரும் உடல்சூட்டை எல்லாம் சரி செய்யும்.

இதையும் படியுங்கள்:
Vitamin B12 - இந்த 9 வகை பானங்களில் நிறையவே இருக்கு! ஆனால்..!
Medu vada

தோல் நீக்காத கருப்பு  உளுந்தை காய வைத்து  அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை ஊறவைத்து வடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு பசியையும் போக்கும். எலும்பு, தசை முறிவு மற்றும் ரத்தக்கட்டிகள் குணமாக உளுந்து சிறந்தது.

உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து அதோடு தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கலக்கி அடிப்பட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் ரத்தக்கட்டு குணமாகும். இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்து களி  தினமும் சாப்பிட்டு வந்தால் பலம் பெறும். வளரும் பிள்ளைகளுக்கு இட்லி பெரும்பங்கு வகிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் சாப்பிடலாம். 

நாற்பது வயது நெருங்கும் பெண்களுக்கும், பருவம் அடைந்த வளரிளம் பெண்களுக்கும் உளுந்து கஞ்சி நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து கஞ்சியும், களியும், லட்டும்  கொடுப்பது வழக்கம்.                             

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com