உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுக்கும் இடம் எது? ராணியா அல்லது பணிப்பெண்ணா?

Happy Family
Happy Family
Published on
mangayar malar strip

இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டு வளா்ந்து வரும் மனித வாழ்க்கையில் அனைவரது வாழ்விலும் அத்தனையும் எளிதில் கிடைப்பதில்லை.

சிலரது வாழ்க்கைபோல சிலருக்கு கிடைப்பதில்லை.

பெரும்பாலும் குறையில்லாத வாழ்க்கையே கிடையாது.

அதற்காக நாம் நமது அன்றாட வாழ்க்கையை வாழலாமா?

'வாழ்க்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும்.'

என சும்மாவா எழுதினாா் கவிஞர். அத்தனையும் வைர வரிகள்தானே! அதுபோலவே வரவே ஜனனமாகும் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

சரி விஷயம் என்னவென்றால் பிறந்தவுடன் தாய், வளரும்போது தந்தை, அடுத்தநிலையில் சகோதரன், சகோதரிகள், மற்றும் உறவுகள். படிக்கும்போது நண்பன், இப்படி சீராக போகும் வாழ்வில் அனைத்து பந்தங்களையும் கடந்து வரும் புதிய உறவே இல்வாழ்க்கையின் துணையான அன்பகலா மனைவி.

நம்மில் எத்தனை பேருக்கு எந்தந்த காலகட்டத்தில் அவளைப்புாிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது? நமக்கானவன், தனது வாழ்க்கைக்கு துணையானவன், தன் உயிாிலும் மேலானவன், என நாம் போடும் மூன்று முடிச்சு எனும் பந்தத்தில் அன்பாய், பண்பாய், ஆதரவுதேடி வருகிறாள், அந்த செடியை பதியன் போடுங்கள், மாறாக பரிதவிக்க விடாதீா்கள்.

'நமது குடும்பம் தழைக்க வந்தவள் அவளே.'

'நமது குலம் காக்க வந்தவளும் அவளே.'

அவளிடம் அன்பு செலுத்துங்கள், உங்கள் வாழ்க்கையின் அன்பை பங்கு போடுங்கள், அவள் எதிா்பாா்ப்பு அது ஒன்றுதானே!

அவளை வேறு கிரஹத்தில் (வேறுவீடு) இருந்து வந்தவள் என பாகுபாடுகாட்டவேண்டாமே.

அவள் நமது வீட்டிற்கு விளக்கேற்ற வந்தவளா?

இல்லை, மாறாக நம்வீட்டின் தீயதை விலக்கி, நல்லதை ஏற்ற வந்தவள்.

பொதுவாக தாய்தான் முதலிடம், அதற்குப்பிறகே தாரம்.

தாயை, பெண்மையை நேசிப்பவன் மனைவியை நேசிப்பான்.

நமது சொந்த பந்தங்களின் பழக்க வழக்கங்கள் அவரவர்களின் குணநலன்கள் இவைகளைச்சொல்லிக்கொடுங்கள்.

வரதட்சணை விலக்குவதில் தவறேதும் இல்லையே! கொண்டு வந்தால் தான் மனைவியா? விலைமதிப்பில்லா அன்பு, பாசம், நேசம், என் கணவர், என் புகுந்த வீடு என்ற உணர்வுகளோடு வருகிறாளே அதுவே மதிப்பு மிகுந்த விஷயமாயிற்றே!

பிரதிபலன் எதுவும் எதிா்பாராமல் கணவன் குணம் எப்படியோ!நம்மை கடைசிவரை கண்கலங்காமல் பாா்த்துக்கொள்வானா, என்ற எதிா்பாா்ப்போடு வருகிறாளே!

அதற்கு நாம்செய்யும் கைமாறுதான் என்ன?

அவளை நேசியுங்கள் என்பதை விட சுவாசிப்போடு காதலியுங்கள், காதலும் அன்பின் பிரதிபலிப்புதானே!

யாருக்காகவும் அவளை, சொந்த பந்தம், அன்னிய உறவு, நட்புகள், மத்தியில் விட்டுக்கொடுக்காதீா்கள் அவளுக்கு உாிய மரியாதையைக்கொடுக்கத் தவறவேண்டாம்.

அதற்காக நீங்கள் பெண்டாட்டி தாசனே அல்ல.

மனைவியின் நேசன் என்று அழைத்தால் என்ன தவறு?

அவளுக்கு என்று ஒரு மனம், உணர்வு, அன்பு, பாசம், நேசம், இப்படி எத்தனையோ உண்டல்லவா!

அதை மதிக்கக்கற்றுக்கொள்வதே நல்ல கணவனுக்கு அழகுதானே.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது வாழ்வின் என்னற்ற, ஏற்ற, இறக்கங்களில் துணையிருப்பவள் அவளே.

அவள் நம்மிடம் வாழ்க்கையைத்தான் பங்கு கேட்கிறாள்.

சொத்திலா பங்கு கேட்கிறாள்!

கருத்து வேறுபாடுகளை களைந்து விடுங்கள், பேசுங்கள், பேசுங்கள், உண்மையாக பேசுங்கள்.

கடைசிவரை துணைக்கு வரப்போவது அந்த ஒரு ஜீவன்தானே!

இளமையில் மடிசாய இடம் கொடுக்கிறாள், வாாிசை சுமக்க மறுபிறவி.

குருதியை பாலாக்கி குழந்தை வளா்ப்பு.

நம்மையும் வாாிசுகளையும் வளர்ப்பதில் பொிய பங்களிப்பு.

நமது தாய் தந்தையர்களின் மனம் கோணாத உபசரிப்பு.

நமது சொந்த பந்தங்களிடம் அனுசரிப்பு.

இப்படி எத்தனை வித தியாகம். அந்தவிஷயத்தில் இளமையில் நாம் செய்யும் தேவையில்லா பலவிஷயங்களின் நம்மை திருத்தும் ஆசானாய்.... அவள்...

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவி உறவை மேலும் நெருக்கமாக்கும் 8 எளிய வழிகள்!
Happy Family

நமக்கானவள், நமக்கு இளமையிலும் முதுமையிலும் தோள்கொடுக்கும் ஒப்பற்ற தோழி.

மொத்தத்தில் உயிா்காக்கும் இன்னுமொரு தாய்.

அவளை கடைசி ஆயுள் உள்ளவரை, உள்ளம் வரை, நேசியுங்கள், தோள்சாய தோழியானவளை அன்பால் வசியம் செய்யுங்கள்.

கடந்து வந்த பாதைகளை அவளோடு அசைபோடுங்கள்.

அவளுக்கு ஒரு இடம் கொடுங்கள். அழியாத சொத்தே அதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com