அச்சுறுத்தும் ஆய்வுகள்! பெண்களே உஷார்!

women with work stress
women with work stressImg credit: pexels
Published on

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை - வேலை என இரண்டையும் சமநிலையில் வைத்திருத்தல் என்பது சவால்கள் நிறைந்தது. தொல்நூட்ப வளர்ச்சி, டிஜிட்டலிசம், அதிகமான அன்றாட தேவைகள், விலைவாசி உயர்வு மற்றும் வேலை செய்யும் முறைகளில் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபத்தில் பெங்களூரில் உள்ள யுவர் டோஸ்ட் (Your DOST) என்ற மனநல சேவை இணையதளம் "ஊழியர்களின் உணர்ச்சி ஆரோக்கிய நிலை" என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வானது, 20 முதல் 50 வயது வரை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி, போக்குவரத்து, பணியாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஊடகம், சட்ட சேவைகள், வணிக ஆலோசனை மற்றும் சேவைகள், இன்னும் பல துறைகள் சார்ந்த 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இருந்து பெற்ற தரவுகளை பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

பாகுப்பாய்ந்த தகவல்களை பாலின அடிப்படையில் பார்த்தோமானால், 72.2 சதவீத பெண் ஊழியர்களும், 53.64 சதவீத ஆண் ஊழியர்களும் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். பாலின அடிப்படையில், இந்தியாவில் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவதைப் பார்க்கலாம். அநேக பெண்கள், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை விட அங்கீகாரமின்மை, குறைந்த மன உறுதி மற்றும் தன்னைப் பற்றிய மற்றவர்களின் அனுமானம் அல்லது தீர்மானம் குறித்து மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இன்டர்வியூ செல்லும்போது செய்யும் தவறுகள்: ஆய்வுகளில் தெரியவந்த உண்மைகள்!
women with work stress

பாகுப்பாயப்பட்ட தகவல்களை வயது அடிப்படையில் பார்த்தோமானால், இந்தியாவில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களில் 64.42 சதவீதர ஊழியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 59.81 சதவீதம் ஊழியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 53.5 சதவீத ஊழியர்கள் பணியிட மன அழுத்தத்தை அதிக அளவில் அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகவே, வயது அடிப்படையில், 21 முதல் 30 வரை உள்ள இந்திய இளைஞர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

 இது குறித்து, யுவர் டோஸ்ட் (Your DOST) தலைமை உளவியல் அதிகாரியான டாக்டர் ஜீனி கோபிநாத் கூறுகையில், "பணியிட இயக்கவியல் மாற்றம் (workplace dynamics), ரிமோட் மற்றும் ஹைபிரிட் வேலைகளின் பரிமாணம் போன்றவை 21 முதல் 30 வயதுடைய மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்கள், அவர்களின் வழக்கமான தொடர்பு மற்றும் ஈடுபாட்டிற்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆதரிக்க வேண்டும்" என்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com