

பெண்களை இறைவன் படைத்ததில் பெரிய உண்மை அடங்கி உள்ளது. இந்த உலகில் எந்த உயிரினம் எடுத்தாலும், அதில் ஆண் என்றும் பெண் என்றும் பிறப்பு உள்ளது. மரங்களில் கூட ஆண் மரம், பெண் மரம் உள்ளது என்பார்கள். சில வகை மரங்கள் கனிகளைத் தராமல் அப்படியே வளர்ந்து நிற்கும். அந்த வகை மரங்களை ஆண் மரங்கள் என்பார்கள்.
வாழ்க்கை துணைக்கு ஒரு பெண் வேண்டும். அந்த பெண் இல்லத்தரசியாகவும், நிதி மேலாண்மை செய்பவளாகவும், ஒரு தோழியாகவும், இப்படி எல்லா வகையிலும் இருப்பதால்தான் உலகம் தாய்மையைப் போற்றுகிறது. அப்படி ஒரு ஆணுக்கு ஒரு பெண் வாழ்க்கையில் அமைய அதிர்ஷ்டம் வேண்டும். அந்த பெண்ணே அதிர்ஷ்டம் உள்ளவளாக அமைந்து விட்டால் அதை விட மகிழ்ச்சி ஏதும் வேண்டுமா?
ஒரு சிலருக்கு அழகான பெண் மனைவியாக அமைந்து விடுவாள். ஆனால், அதிர்ஷ்டம் இருக்காது. குடும்ப வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்படுத்தும். சில பெண்கள் சாதாரணமாக இருப்பார்கள். அவர்கள் புகுந்த வீட்டிற்கு சென்றால், அந்த குடும்ப சூழலே மாறி நல்ல நிலைமைக்கு வரும் குடும்பங்களும் உண்டு. அப்படி அதிர்ஷ்டமுள்ள பெண்கள் யார்? என்பதைப் பார்க்கலாம் வாசக அன்பர்களே!
அதிர்ஷ்டமுள்ள பெண்களின் அடையாளமாக சில இலக்கணங்கள் உள்ளன. அவைகளை அறிந்து கொள்வது நல்லதுதானே. வாங்க பார்க்கலாம்.
பெண்ணின் உள்ளங்காலில் முக்கோண குறி இருந்தால், அந்த பெண் புத்திக்கூர்மையும், நல்ல புரிதல் கொண்டவளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பாள் என அங்கலட்சண சாஸ்திரம் (Lakshana shastra) கூறியுள்ளது.
பெண்ணின் தொப்புளுக்கு அருகில் மச்சம் இருந்தால், வளமான அதிர்ஷ்டமுள்ள வாழ்க்கை அமையும் பெண்ணாக இருப்பாளாம்.
பெண்ணின் கால்களில் உள்ள கட்டை விரல்களின் அகலம் வட்டமாக அமையப் பெற்றால், அதிர்ஷ்டகாரியாம்.
அதே போல கால் விரல்களுக்கு அடியில் சுழல் முத்திரை இருந்தால், கடவுளின் அருள் கிடைக்கப் பெற்றவளாக இருப்பாளாம்.
கால் பாதங்களில் சங்கு, தாமரை குறிகள் இருந்தால், கணவனின் உயர்ந்த வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது இந்த குறிகள்.
மூக்கின் மேல் மச்சம் இருந்தால், நல்ல வசதி படைத்த பணக்கார பெண் தான். கட்டிய கணவன் பாக்கியவான்.
பெண்களின் நாக்கு மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தால், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி கடலில் நீந்துபவளாம்.
கண்ணின் மூலையில் சிவப்பு நிற குறி இருந்தால், அதிர்ஷ்டம் நிறைந்தவளாக கருதப்படுகிறாள்.
கால்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் இருப்பது, கணவனை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவளுக்கான அடையாளமாம்.
கால் விரல்கள் ஒரே நீளமாக இருந்து விட்டால், முழு வாழ்க்கையும் திருப்திகரமாகவும், மகிழ்ச்சிகரமாக இருக்குமாம்.
பெண்களின் இடது கன்னத்தில் மச்சமா? அந்த வகையான பெண்கள் முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய், நேத்து வைச்ச மீன் குழம்பு...' என பாட்டுப்பாடி உணவை ரசித்து ருசித்து சாப்பிடக் கூடிய பெண்ணாம். சமைப்பதிலும் வல்லவராம்.