பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா அவசியம்: ஏன் தெரியுமா?

Yellow Water Festival
Yellow Water Festival
Published on

பூப்பெய்திய பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடுவது காலங்காலமாக கடைபிடித்து வரும் ஒரு சடங்காகும். இந்த சடங்கு அவசியம் தானா, இந்த சடங்கின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

பிறப்பு முதல் இறப்பு வரை பெண் பிள்ளைகள் பல வலிகளைத் தாங்கிக் கொண்டு தான் இந்த உலகில் வாழ வேண்டியிருக்கிறது. ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென வயிற்று வலியால் துடித்தால், அதனைப் புரிந்து கொண்டு பெரிய மனுஷி ஆகி விட்டாள் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதன் பிறகு வீட்டில் உறவினர்கள் குவிந்து விடுவார்கள். ஆக வேண்டிய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.

பூப்பெய்திய பெண்ணுக்கு செய்யப்படும் மிக முக்கியமான சடங்காக மஞ்சள் நீராட்டு விழா பார்க்கப்படுகிறது. பலரும் மற்ற விழாக்களைப் போன்று இதுவும் ஒரு விழா என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த விழாவின் சிறப்பே வேறு. இதன் முக்கியத்துவமும் வேறு.

திருமணம் ஆகாமல் அகால மரணமடைந்த சில ஆன்மாக்கள், பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் பின்தொடரும் என தாந்த்ரீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் தான் பூப்பெய்திய பெண்களை மஞ்சள் நீராட்டு விழா முடியும் வரை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். “பெண்களைத் தொடரும் பிரம்ம ராக்ஷஸஸர்களும்” என்ற ஒரு வரி சஷ்டி கவசத்தில் வருகிறது. இதனுடைய அர்த்தம் கூட இதனுடன் ஒன்றிப் போகிறது. இந்த ஆன்மாக்களிடம் இருந்து பூப்பெய்திய பெண்களைப் பாதுகாக்கத் தான் மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றி மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடுகின்றனர் எனக் கூறப்படுகிறது. மேலும், இச்சமயத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சத்தான உணவுகள் அவர்களைப் உடலளவிலும் பலப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
பாகுபாட்டுக்கு ஆளாகும் பெண்கள்: நவீன உலகில் சமத்துவம் நிலைக்குமா?
Yellow Water Festival

மஞ்சள் நிறம் அம்மனுக்கான வண்ணம். நன்மைகளை கிரகித்துக் கொள்ளும் குரு பகவானுக்கு ஏற்ற நிறமும் இதுதான். பூப்பெய்திய பெண்களுக்கு சாஸ்திரத்தின் படி மஞ்சள் நீராட்டு விழா மிகவும் அவசியமாகும். இருப்பினும், இந்த விழாவை மிகவும் எளிமையாக நடத்துவது தான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

பொதுவாகவே மஞ்சள் ஒரு மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. கிருமி தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் மஞ்சள் நீராட்டு விழா முக்கியமாகும். மேலும் பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து, நோய் நொடிகளிடம் இருந்து பாதுகாக்கும் கவசமாகவும் இது செயல்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் நீராட்டு விழாவை போஸ்டர் அடித்து, ஊருக்கே தெரியும் படி சிலர் செய்கிறார்கள். இது மன ரீதியாக அப்பெண்ணை பாதிக்கக் கூடும். மேலும் இது பாதுகாப்பான செயலும் அல்ல. ஆகையால், பெண் வீட்டார் இம்மாதிரியான செயல்களைத் தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com