வீட்டை தனித்துவமாக அலங்கரிக்கலாம் வாங்க..!

decorate the house uniquely..!
home interior..Image credit - pixabay
Published on

ம்மில் பலரும் வீட்டை நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அழகு படுத்துவதில் ஆர்வம் காட்டுவோம். அடிக்கடி ஃபர்னிச்சர், அலங்காரப் பொருட்களை மாற்றியமைப்பதன் மூலம் வீட்டிற்கு புது லுக் கிடைப்பதோடு நமக்கும் புத்துணர்வை கொடுக்கும்.

வாடகை வீடோ, சொந்த வீடோ சுவரின் வண்ணங்கள்தான் பிரதானமாக நம்மை வசீகரிக்கும். ஆதலால் முதலில் வண்ணங்களை விரும்பிய வண்ணம் தேர்வு செய்வது அவசியம். சொந்த வீடெனில் நீண்ட காலம் உழைக்கும், கறை படியாத பெயிண்ட்களை தேர்வு செய்ய வேண்டும்.

வெளிப்புற, உட்புற சுவருக்கென தற்போது தரமான பல வண்ணங்களில் பெயிண்ட்கள் வந்து விட்டன. அதை தேர்வு செய்து கொள்ளலாம். வண்ணத்துக்கு தகுந்தவாறு ஃபர்னிச்சர்களை வாங்குவதை விட, வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்யலாம். வண்ணம் அடிப்பதற்கு முன் ஃபர்னிச்சர் மற்றும் அலங்காரப் பொருட்களை முடிவு செய்தல் வேண்டும்.

தரை விரிப்புகளை  சிறியதாக போடுவதை விட ரூமுக்கு தகுந்தவாறு பெரிய தரை விரிப்பை போட்டால் அழகாக இருக்கும். திரைச்சீலைக்கு அடியிலிருந்து வெளிச்சம் வந்தால் நன்றாக இருக்காது. எப்போதும் தரையைத் தொடும் விதமாக நீண்ட உயரமான திரைச்சீலைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. அது வீட்டின் உயரத்தை அதிகரித்து காட்டும்.

சோபாக்களுக்கு  போட கடையிலிருக்கும்போது பெரிய தலையணைகள், குஷன்கள் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் உள்ள பர்னிச்சர்களில்  வைத்தால் எதிர்பார்த்த அழகு கிடைக்காது. பர்னிச்சர்களுக்கு சிறிய தலையணைகளையே தேர்வு செய்வது நல்லது.

சோஃபாவில் நிறைய குஷன், தலையணைகளை வைப்பதை விட 2,3 வைத்தால் தாராளமாக உட்கார வசதியாக இருக்கும்.

சான்ட்லியரை மிகவும் உயரமாக தொங்கவிடுவதை விட ஹாலுக்கு தகுந்தவாறு சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். உயரத்தில் இருந்தால் தொங்கும்போது அதன் வெளிச்சம் மேற்கூரையில் மட்டுமே அதிகம்படும்.

அறையை தீம் படி வைப்பதென்றால் யோசித்து வைக்க வேண்டும். காலப்போக்கில் அது போராடித்தால் மாற்ற அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். எளிதாக நீக்க முடியாத டிராயிங், பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்.

ஃபர்னிச்சர், விளக்குகளை அழகுக்காக வாங்காமல் செளகரியத்திற்காக வாங்க சிறப்பாக இருக்கும். ஒரே மாதிரியான மாடல்களில் விளக்குகளை வைக்க அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வில் முன்னேற எடுக்க வேண்டிய 12 முக்கிய முடிவுகள்!
decorate the house uniquely..!

இன்ட்டீரியர் பிளாண்ட் வைக்கும்போது இடத்தை அடைக்காமல் வைக்கவேண்டும். போன்சாய் போன்றவற்றை வைத்தால் பராமரிப்பு அவசியம். ஊஞ்சல் பாரம்பரியமாக உள்ளதை போடலாம். தற்போது தரமான பல விதங்களில் ஊஞ்சல்கள் வந்து விட்டன. பொருத்தமானதை தேர்ந்தெடுத்து அமைக்க நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் வீட்டு அலங்காரம் என்பது அவரவர் தனிப்பட்ட டேஸ்ட் டை பொருத்தது. ஆடம்பரமாக இல்லாமல், அழகானதை வைக்க வீட்டின் பொலிவு அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com