சிறுகதை: காதல் தூது

காதல் தூதரான விமலா, பழைய நினைவுகளும் புதிய உணர்வுகளும் கலந்த கடிதம் மூலம் தோழி கவிதாவின் திருமண வாழ்வை காப்பாற்றும் தருணங்கள்
woman with a letter
காதல் தூது, short story in tamilcredit AI image
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on
MM strip
MM strip

காதல் தூது - short story

ங்கிலப் புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டங்கள் குறைய ஆரம்பித்த மாலை நேரம்...

கூடலழகர் கோயில் வாசலில், செருப்புகள் யாவும் தத்தம் ஜோடிகளை மாற்றிக் காதலிக்க, தர்ம தரிசன வரிசையில், சில அதர்ம வரிசைப்படி பக்தர்கள் முட்டி முன்னேறினர்.

“ஏங்க, இப்படி அநியாயம் பண்றீங்க? செஞ்ச பாவம் தொலைக்கத் தானே இங்கே வர்றோம், திரும்பவுமா?..” விமலா வேதனையில் இரைந்தாள்.

“என்ன செய்ய? பழகிப் போன குணம், பக்தி வேஷம் போட்டால் மட்டும் மாறுமா?..” பெரியவர் ஒருவர் பட்டெனப் புலம்பினார்.

“நல்லா சொன்னீங்க ஐயா...” என அவரைப் பாராட்டித் திரும்பிய கவிதாவின் பார்வையில், சில வினாடிகள் விமலா நின்று மறைந்தாள்.

அர்ச்சகர் கொடுத்த துளசியைக் கையில் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு சற்று நகர்ந்த கவிதாவின் மனம், தான் விமலாவைப் பார்த்த காட்சியை மீண்டும் யோசிக்க வைத்தது. அடுத்த ஐவர் நகர்ந்ததும் விமலா வரிசையை விட்டு வெளியே வர, அவள் கண்ணிலும் அதே நட்புணர்வுப் பார்வை!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com