ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Updated on
-எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
ஓவியம்: பிரபுராம்

"என்ன இது….நேத்து ஏன் ஆபீசுக்கு வரலைன்னு கேட்டா, இப்படி லீவ் லெட்டர்ல அஞ்சு, ஆறு காரணங்களை எழுதி வச்சிருக்கீங்க?"

"உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு காரணத்தை டிக் பண்ணிக்குங்க சார்!"

—————————————

"என்னங்க இது… ஆளுக்கு ஆள் உட்கார்ந்துக்கிட்டு ஊசியில நூல் கோர்க்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க?"

"இந்த டாக்டர் வித்தியாசமா கண் டெஸ்ட் பண்ணுவார்னு சொன்னேன் இல்லையா… அதான்!"

—————————————

"டேய்… நேத்து எங்க அம்மாவும் மனைவியும் சேர்ந்து செஞ்ச புடலங்காய் கூட்டு வாயில வைக்கவே முடியலை…"

"அப்போ அது 'கூட்டுச் சதி'ன்னு சொல்லு!"

—————————————

"நீ வாங்கியது போலி பஞ்சவர்ணக்கிளின்னு எப்படிச் சொல்றே?"

"அதுமேல தண்ணி பட்டதும் சாயம்போகுதே…"

—————————————

"தலைவர் ஏன் சோகமா இருக்கார்?"

"கட்சித் தொண்டன் ஒருத்தன் கட்சியை 'ஓ எல் எக்ஸ் 'ல விற்க முயற்சி பண்ணானாம்!"

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com