பகுதி – 5.-நளினி சம்பத்குமார்.ஓவியம்: வேதா.குரு ஆசை(சி)யால் குருவானவர்."அபார மஹிமா குரு மஹிமா"… ஆம் அபாரமான மஹிமை நிறைந்த ஒன்று தான் குருவின் மஹிமை. ஆசார்யனின் திருவடிகளை, குருவின் திருவடிகளை நாம் பிடித்து கொண்டால் போதும், நம்மை பகவானுக்கு பிடித்தபடி மாற்றி, பகவானிடமே காட்டி விடுவார் குரு. .120 வருடங்கள் இவ்வையகத்தில் வாழ்ந்து, அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தம் ப்ருந்தாவனத்திற்கு சென்று இன்றும் தன்னை நாடி வரும் சிஷ்யர்களுக்கு கண்கூடாக ஞான பாலை ஊட்டிக் கொண்டிருக்கும் உயரிய குருவான, வாதிராஜ தீர்த்தரின் பிறப்பே குரு அருள் திரு அருள் என்பதை மெய் சிலிர்க்கும் வண்ணம் மெய்ப்பித்து கொண்டிருக்கிறது..உடுப்பிக்கு பக்கத்தில் உள்ள கும்பாஸி என்ற கிராமத்தை சேர்ந்த குரு பக்தி மிகுந்த தம்பதியர்களான ராமாச்சார்யாருக்கும், கெளரி அம்மாளுக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் குழந்தை பாக்கியம் என்பது கிட்டாமல் இருந்த காலம் அது. மனதில் இருக்கும் குழப்பம் தீர வேண்டும் என்றாலும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்றாலும், குடும்பத்தில் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் வர வேண்டும் என்றாலும் குரு மீது அதீத பக்தி கொண்டவர்கள் முதலில் நாடுவது அவரவர்களின் குருவைதானே. அப்படி தான் அந்த தம்பதியும் தங்களது குருவான வாகீச தீர்த்தரின் முன் சென்று தங்களுக்கு குழந்தை பேறு கிட்ட வேண்டும் என வேண்டி நின்றனர். ஞான கடவுளான ஹயக்ரீவனின் திரு நாமமான வாகிச என்கிற திரு நாமம் கொண்ட அந்த ஆசார்யனுக்கு தெரிந்துவிட்டது, இவர்கள் வயிற்றில் உதிக்க போகும் பிள்ளை தான் பின்னாளில் ஒரு குருவாக வருவான்(ர்) என்று… பிராகாசமான முகத்தோடு பிரசாதம் வழங்கிய ஸ்ரீ வாகீச தீர்த்தர், தம் திருவாய் மலர, "சீக்கிரத்தில் ஒரு சத்புத்திரன் வந்து பிறப்பான். ஆனால், அக்குழந்தையை சிறிது காலத்திற்கு பின் மடத்திற்கு கொடுத்து விட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். பிள்ளை வரம் பலித்து பிள்ளை வரப்போவதை நினைத்து பூரித்த தம்பதியினருக்கு, அப்பிள்ளையை மடத்திற்கு கொடுத்து விட வேண்டும் என்ற நியமனம், நிபந்தனை மனதில் வலியை உண்டாக்கியது. குருவிற்கா தெரியாது நம் வலியும், வலிமையும். புன்முறுவலோடு தொடர்ந்தார் ஸ்ரீ வாகீச தீர்த்தர், 'சரி, இப்படி வைத்து கொள்வோம். ஒரு வேளை அந்த குழந்தை உங்கள் அகத்துக்குள்ளேயே (வீட்டுக்குள்ளேயே) பிறந்து விட்டால், அவனை மடத்துக்கு நீங்கள் தர வேண்டாம். ஆனால், ஒரு வேளை அக்குழந்தை வெளியில் பிறந்து விட்டால், அக்குழந்தை ஒரு சன்யாசி ஆக, மடத்தை சார்ந்தவனாக இருக்க நீங்கள் அவனை மடத்துக்கு தந்து விட வேண்டும்." வாகீச தீர்த்தரின் வாக்கிற்கு வாஞ்சையோடு தலையாட்டினர் அந்த தம்பதியினர்..பத்து மாதங்கள் தம் தர்மபத்தினியை அகத்திற்குள்ளேயே வைத்து கொள்வோம் என்று முடிவெடுத்து ராமாசாரியார், தன் மனைவி வீட்டு வாயிற்படியைக் கூட தாண்ட கூடாது என பார்த்து பார்த்து கெளரி அம்மாளை படி தாண்டா பத்தினியாக பார்த்து கொண்டார். குருவின் ஆசியும் ஆசையும், வேறு மாதிரி அல்லவா இருந்தது? ஆம். ஒன்பது மாதத்தை நெருங்கி கொண்டிருந்தாள் கெளரி அம்மாள். ஒரு துவாதசி நன்னாள் காலை வழக்கம் போல வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள துளசி செடிக்கு அழகாய் கோலம் போட்டு விட்டு, துளசி பூஜையை பக்தி சிரத்தையோடு செய்து விட்டு, பசியோடு அமர்ந்திருந்த தனது கணவருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தாள் அந்த உத்தமி. சட்டென்று அவர்களது வீட்டு கொல்லை புறத்தை ஒட்டி இருந்த அவர்களது தோட்டம் நோக்கி பசு மாடு ஒன்று அவசர அவசரமாக, செடிளையும், வாழை மரங்களையும் மேய்ந்து கொண்டிருந்தது. சாப்பிட உட்கார்ந்து விட்டவர் பாதி சாப்பாட்டில் எழுந்திருக்க கூடாது என்ற சாஸ்திரம் நினைவுக்கு வர , ராமாசாரியரால் எழுந்திருக்க மனமில்லை. வயிற்றில் உள்ள சிசுவை மறந்த அந்த அம்மாள், பசுவை விரட்ட வீட்டு படியை தாண்டி விட்டாள். தோட்டம் பக்கம் போனவளுக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்து, அவர்களது அகத்திற்குள் இல்லாமல் அகத்தின் வெளியே, தோட்டதில் குழந்தை தாயின் கர்ப வாசத்தை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது..தன் ஞான த்ருஷ்டியால் ஞான குழந்தையின் வரவை அறிந்து கொண்டு விட்டார் ஞானாநந்த மூர்த்தியின் பெயரை கொண்ட ஸ்ரீ வாகீச தீர்த்தர். தம் சிஷ்யர்களை அழைத்து ஒரு தங்க தாம்பாளத்தை எடுத்து கொண்டு ராமாசாரியரின் வீட்டு தோட்டத்திற்கு போகும் படி அன்பு கட்டளையிட்டார் அந்த குரு. ஆக, அந்த சிசுவானது பூமியை தொடுவதற்கு முன்பே மடத்திலிருந்து வந்த தங்க தாம்பாளம் அந்த குழந்தையை ஏந்தி கொண்டது… தம் மதத்திற்கு பின்னாளில் குருவாக ஏற்றம் பெற போகும் அந்த குரு க்ருபா குழந்தையை, பூமியின் வாசமே படாமல், கலியிடம் வசப்படாமல், குருவின் அருட் வசத்தால் பிறந்த அக்குழந்தையை பூவராஹர் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்..குருவருள் நிரம்பிய அச்சிறுவனை தேடி திருவருளும் வந்து சேர்ந்தது. 5 வயதில் உபனயனம் செய்து கொண்டு, தம் 7 வயதில் சன்யாசம் வாங்கி கொண்டு, 8 வயதில் அவ்வளவு எளிதாக எட்டாத ஆனால் குரு அருளால் பரிபூரணமாக கிட்டிய மடாதிபதி எனும் உயரிய ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டார் ஏற்றமிகு வாதிராஜர். பெற்றோர் இட்ட பெயரான பூவராஹர் என்ற பெயர் பூர்வாஸ்ரம பெயர். ஆம், சன்யாச தீட்சை வாங்கி மத்வ மடாதிபதி ஆன பின் வாகீச தீர்த்தரின் அருளாசியிலும் வாகீச பகவானின் ஆதர்ச பக்தனான வாதிராஜ தீர்த்தரோடு நேரிடையாக பேசுவார் ஹயக்ரீவர். ஹயக்ரீவர் மீது அலாதி பக்தியும் ப்ரியமும் கொண்டவர் வாதிராஜர்..வாதிராஜர் தினமும் நெய்வேத்யத்திற்கு என்று செய்யும் ஹயக்ரீவ மண்டி என்ற பிரசாதத்தை சாப்பிட ஹயக்ரீவனே ப்ரத்யட்சமாக வெள்ளை குதிரை ரூபத்தில் வந்து வாதிராஜர் தன் சிரசின் மீது ஏந்தி கொண்டிருக்கும் பிரசாதத்தை தம் கால்களை அவரது தோள்களின் மீது வைத்து கொண்டு சாப்பிட்டு விட்டு சென்று .அந்த பிரசாதத்தின் ஒரு பங்கை வாதிராஜாரிடமே விட்டு செல்வார், பகவத் சேஷா என்று அந்த பிரசாதத்தையே விசேஷமாக உட்கொண்டு வருவாராம், ஹயக்ரீவ உபாசகரான, வாதிராஜர். ஒரு நாள், தீய மனம் கொண்டவர்கள் கலந்து வைத்த விஷம் கலந்த பிரசாதத்திலிருந்து வாதிராஜரை காப்பாற்ற தாமே முழு பிரசாதத்தையும் உட்கொண்டு தம்மை பச்சையும் நீலமும் கொண்ட மேனியாக மாற்றி கொண்டான் ஹயக்ரீவன். குரு அருள் பெற்றவருக்கு என்றுமே திருஅருள் துணை நிற்கதானே செய்யும்..ஒரு முறை வாதிராஜர் தங்கியிருந்த மடத்திற்கு பின்புறம் இருந்த கடலை தோட்டத்திலிருந்து பதட்டத்தோடு ஓடி வந்தானாம் விவசாயி. தான் நாடி வந்திருப்பது, ஒரு குருவின் திருவடி என்பது விவசாயிக்கு தெரியாது. "ஐயா சாமி. தினைக்கும் ராத்திரி ஒரு வெள்ளை குதிரை வந்து நான் தோட்டத்துல பயிரிட்டு வெச்சுருக்குற கடல எல்லாதையும் தின்னுப்புட்டு போயிடுதுங்க. அந்த குதிரையை துரத்தி புடிக்க வந்தா அதோ அது நீங்க உட்கார்ந்திருக்குற இந்த மடத்துலதான் சாமியோவ் வந்து ஒளிஞ்சுக்கிது. அந்த குதிரையை தேடிதான் சாமி நான் இங்க வந்தேன்" என முறையிட வாதிராஜரோ, "இங்க மடத்தில் குதிரை எதுவும் கிடையாதப்பா" என்று சொல்லியபடி ஞான த்ருஷ்டியில் கண்டதோ அந்த வெள்ளை குதிரை ரூபத்தில் வந்த ஹயக்ரீவரை. அந்த குதிரை வந்து போன சுவடெல்லாம் பொன்னாக மாறி இருந்த விந்தையை பார்த்து அந்த விவசாயி தன் கண் பார்வை போனாலும் பரவாயில்லை அந்த ஹயக்ரீவ ரூபத்தை நேரிடையாக தன் கண்களால் பார்க்க வேண்டும் என்று குருவிடம் வேண்ட, அவனுக்காக ஹயக்ரீவரை காட்சி கொடுக்க செய்தார் குரு வாதிராஜர்.குரு வாக்கிற்கு இறைவன் மறுப்பு சொல்வாரா என்ன?