சைக்ளிங் – இது சாதாரண ​விளையாட்டல்ல!

சைக்ளிங் – இது சாதாரண ​விளையாட்டல்ல!
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 

-ஜி.எஸ்.எஸ்.

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுகளில் சைக்ளிங் போட்டி நடைபெற்றது.  இந்தியாவின் சார்பில் விஸ்வஜித் சிங் என்பவர் பதினைந்து கிலோமீட்டர் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டார்.

இறுதிச்சுற்று தொடங்கியது. போட்டியாளர்கள் வெகுவேகமாக அவரவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.  அப்போது நடந்தது அந்த எதிர்பாராதத் திருப்பம்.  எட்டு சைக்ளிங் வீரர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர்.  அவர்களின்  சைக்கிள்கள் கீழே விழுந்தன.

இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயது மாட் வால்ஸ் கடும் காயத்துக்கு உள்ளனர்.  அங்கிருந்த தடுப்புச்சுவர் ஒன்றின்மீது  அவர் மோதி விட காயங்கள் அதிகமாகவே இருந்தன.  பின்னர், அவர் உடலில் பல தையல்கள் போடும்படி நேர்ந்தது.  இவர் முந்தைய ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.   கனடாவைச் சேர்ந்த மற்றொரு சைக்ளிங் சாம்பியனான டெரிக் கீ என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நமது விஸ்வஜித் சிங்கும் மோதிய சைக்கிள்களுக்கு மிக அருகில் வந்துகொண்டிருந்தவர்தான்.  ஆனால், கடைசி நொடியில்
புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு, அந்தப் பகுதியில் இருந்து, சற்று விலகிச் சென்றதால் அவர் விபத்திலிருந்து தப்பித்தார்.  முதல் மூவரில் ஒருவராக அவரால் வர முடியவில்லை.  நியூசிலாந்தைச் சேர்ந்த கோர்பின் ஸ்ட்ராங் முதலிடத்தைப் பெற்றார்  என்பது வேறு விஷயம் என்றாலும் ஓர் இந்தியர் இறுதிச்சுற்று அடைந்ததும் ஒரு விபத்தில் இருந்து தப்பித்ததும் ஆறுதலளிக்கும் செய்திகள்தான்.

சைக்ளிங் போட்டிகள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ:

சைக்ளிங் போட்டி என்பது மிகத் தொன்மையானது.  1866 ஏதென்ஸ் ஒலிம்பிக்​ஸிலேயே இது அறிமுகமாகிவிட்டது.

சைக்கிள் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு, தான் செல்ல வேண்டிய பாதை குறித்து தெளிவான புரிதல் இருக்கவேண்டும்.  அந்தப் பாதையை விட்டு சிறிதும் விலகக்கூடாது.  குறுக்கு வழியில் செல்லக்கூடாது.  பலவித திருப்பங்களையும் வளைவுகளையும் கொண்டதாக இந்தப் போட்டி இருக்கும். ஆனால், கடைசி 200 மீட்டர் சாலை வளைவு இல்லாததாகவும் தடை இல்லாததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் வேகத்தை கூட்டிக்கொண்டே அவர்களால் வெற்றிக் கோட்டை நெருங்கமுடியும்.

போட்டியின்போது சைக்கிளில் ஹேண்டில்பாரை விட்டு ஒருபோதும் போட்டியாளர் தன்  கையை எடுக்க கூடாது.  அவரது முன்னங்கைகள் தரைக்கு இணைகோடு போல இருக்க வேண்டும்.  உடல் வளையலாம்.

வெற்றிக்கோடு என்பது கருப்பு வண்ணத்தில் வரையப்பட்டதாக இருக்கவேண்டும்.  அது நாலிலிருந்து ஆறு சென்டிமீட்டர் அகலம் கொண்டதாக இருக்கவேண்டும்.  அதாவது தொலைவிலிருந்து பார்க்கும் போது போட்டியாளர்களுக்கு அந்த வெற்றிக் கோடு தெளிவாகத் தெரிய வேண்டும்.  எந்த  சைக்கிளின் முன் சக்கரத்தின் முனை வெற்றிக் கோடை முதலில் தொடுகிறது அந்தப் போட்டியாளர் வென்றதாக அர்த்தம்.

எல்லா சர்வதேசப் போட்டிகளிலும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.  போட்டியாளர்களுக்கிடையே  எந்த விதத்திலும் தகவல்தொடர்பு இருக்கக் கூடாது (சைகைகள் மூலம் கூட பேசக்கூடாது).

ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் பாதையை மறித்தபடி அகலமாக தங்கள் சைக்கிள்களை ஓட்டி பின்னால் வருபவர்களுக்கு தடையாக இருக்கக் கூடாது.

போட்டியின் நடுவே சைக்கிள் பழுதுபட்டால் அதற்கென்று ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் ரிப்பேர் செய்யும் பகுதிகளுக்குச் சென்று தங்கள் சைக்கிளின் பழுதை நீக்கி கொள்ளலாம்.

அன்னா கீஸென்ஹோஃபெர்
அன்னா கீஸென்ஹோஃபெர்

1984 ஒலிம்பிக்ஸிலிருந்து மகளிருக்கான சைக்ளிங் போட்டிகள் இடம் பெற்றன. நெதர்லாந்தைச் சேர்ந்த அன்னா வான் டெர் ப்ரெக்கென் என்பவர் இதற்கு முன் சைக்ளிங் சாம்பியனாக இருந்தார். அவரை
2021 ஒலிம்பிக்ஸில் வென்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த அன்னா கீஸென்ஹோஃபெர் தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனாகியிருக்கிறார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com