ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
 -வி. ரேவதி, தஞ்சை
படங்கள்; பிள்ளை

"மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க…! "

   " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!  

*******************************                

"வக்கீலுக்கு நிறைய கேஸ் வருமோ,,,?"

"கேஸ் கட்டைத்தான் தலைக்கு வச்சு தூங்குவார்னா பாருங்க! "

******************************* 

'டிராபிக் போலீஸ்: "லைட் இல்லாமல் நைட்டுல வர்றதே தப்பு ; இதுல, என் மேல மோதி வேற  நிப்பாட்றியே,,,?"

டூ வீலர் காரர் :  "சாரி  சார்இருட்டுல கண்ணு தெரியலை சார்…

*******************************

"உங்க பொண்ணு தங்கத்துக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்காமே,பையன் எந்த ஊர் சார்?"

  "செம்பூர் சார் ! "

"அப்ப நல்லா செட் ஆயிடும்!"

*******************************

"தூக்கத்துல என் மனைவி, நறநறன்னு பல்லை கடிக்கிறா டாக்டர் ,,,?"

   "பகல்ல உங்க மேல இருந்த கோபம், இன்னும் தீரலைனு அர்த்தம் சார்!"                                          

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com