
"எதுக்கு வாத்தியார் ஆன்லைன் கிளாஸ் வேண்டாம்னு சொல்லுறார்?"
"கிளாஸ் ரும் மாதிரி தூங்க முடியவில்லையாம்."
……………………………………………
"எதுக்கு மன்னர் போருக்கு ஓய்வு கொடுத்தார்?"
"முதல்ல மாதிரி வேகமாக ஓட முடியவில்லையாம்."
……………………………………………
கொரோனா மூன்றாவது அலை வந்தவுடன் மன்னர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கார்…"
"பின்ன போர், புலவர் தொல்லை இருக்காதுலா."
……………………………………………
"மன்னர் மாதிரி யாருமே பொய் பேச முடியாது."
"ராணியிடம்தானே."
……………………………………………
"தலைவர் அலும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு."
"எப்படி?"
"வோட்டுக்காக சின்ன குழந்தைகள் காலில்கூட விழுகுறார்."
……………………………………………
"இவர் போலி டாக்டருன்னு எப்படி சொல்ற?"
"ஊசி போட கூட நர்சையை கூப்பிடுறார்."
……………………………………………
"நம்ம தலைவர் செருப்பை தூக்கிட்டார்."
"அப்புறம்?"
"அவரே அடிச்சுகிட்டார்."
……………………………………………
"டாக்டர் தலை ரொம்ப கனமாக இருக்கு."
"இருங்க! எடை போட்டு பார்த்து சிகிச்சை அளிக்கலாம்."