ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
 ஓவியம்: பிரபுராம்

டாக்டர்! பயப்படும்படியா  ஒண்ணு மில்லையே?

உங்க எல்லா டெஸ்டும் நார்மலா இருக்கேன்னு இப்ப நான் தான் பயப்படுறேன்!
-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

************************

"எங்க ஹாஸ்பிடல்ல உலகத் தரம் வாய்ந்த ட்ரீட்மென்ட் கொடுக்குறோம்…"

" இருந்தாலும் சாதாரண மூக்கடைப்புக்கு பைபாஸ் சர்ஜெரி பண்றதெல்லாம் ரொம்பஓவர்டாக்டர்…"
-யுவகிருஷ்ணா  தூத்துக்குடி.

************************

"நான் இப்போ தனி ஆள் இல்லை, எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்கு…"

" ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு திரியாதேன்னு நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை…"
-யுவகிருஷ்ணா  தூத்துக்குடி    

************************

-வி. ரேவதி, தஞ்சை

பெண்ணின் தந்தை: "பொண்ணு பிடிச்சிருந்தாத்தான் சொஜ்ஜி , பஜ்ஜி ன்னு சொல்லிட்டீங்களா  தரகரே…?"

 தரகர்: " சொன்னதுக்கு, 'பையனை தவிர மத்தவங்க சாப்பிடறோம்' னு   பிள்ளையோட அப்பா சொல்றாருங்க…!"

************************

 "அந்த ஆபீஸ்ல  வெளிப்படைத் தன்மை அதிகமா  இருக்கு சார்.. '!"

  "எப்படி சொல்றீங்க?"

 "இன்னின்ன வேலைக்கு  இவ்வளவு   சம்திங்னு  நோட்டீஸ் போர்டுலயே எழுதி ஒட்டிருக்காங்களேl."

************************

"அந்த தலைவர் உண்மையிலேயே  ரொம்ப வித்தியாசமானவர்தான்!"

 "எப்படிச் சொல்றீங்க?"

"எல்லாரும் சினிமாவுல நடித்து பிரபலமாகி அரசியலுக்கு வருவாங்க; தலைவர், அரசியல்ல  திறம்பட நடிச்சு  சினிமாவுக்கு போயிருக்காரே!"

************************

மனைவி: "ஆபீஸ் வேலையை வீட்டுல வந்து  செய்யாதீங்கன்னு  எத்தனை தடவை சொல்லிருக்கேன்…?"

கணவன்: "கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடும்மா…!"

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com