0,00 INR

No products in the cart.

குரு அருள் திரு அருள்!

பகுதி -2
-நளினி சம்பத்குமார்
ஓவியம்; வேதா
அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை

மஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும் மேலான பலன்களை தரக்கூடியது குரு குளிர குளிர தன் கண்களால் பார்ப்பது. அதனையே குரு கடாக்‌ஷம் என்று கூறுவார்கள்.   அது என்ன 1011 பார்வை என்றால்… பரம சிவன் தன் 3 கண்களால் பார்க்க கூடியது, ப்ருஹ்மா தன் 8 கண்கள் ( 4 தலைகள்) கொண்டு பார்ப்பது… ஆயிரம் கண்கள் கொண்டு நாராயணன் பார்ப்பது ஆக மொத்தம் 1011. இவர்கள் மூவரும் சேர்ந்து பார்க்கும் பார்வையை விட மிகவும் பவர்ஃபுல்லானது குருவின் பார்வை என்று அந்த சுபாஷிதம் சொல்கிறது.  பகவானை விட உயர்ந்தவர் குருவானவர்.

ஒருவன் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் சரி. கர்ம வினைகள் அவனை மீண்டும் மீண்டும் தாக்கி கொண்டிருந்தாலும் சரி, ஒரு குருவின் க்ருபா கடாக்‌ஷம் அதாவது ஒரு குருவின் அருட் பார்வை என்பது அவன் மீது எப்போது படுகிறதோ அதோடு அவனது எதிர்காலம் என்பது நிச்சயம் பிரகாசமாக தான் மாறி போகும்.

ரு முறை சந்திரன், சகல விதமான சாஸ்திரங்களையும், பாடங்களையும் குருவிடம் கற்று தேர்ந்தான். எல்லாவற்றையும் நாம் குருவிடமிருந்து கற்று கொண்டு விட்டோமே..இனி நாம் குருவிற்கு நிகரானவர் தான் என்று நினைத்து கொண்டு சற்றே அகங்காரம் கொண்டான் குளிர்ச்சியே வடிவான சந்திரன். குருவிடம் இருக்கும் அத்தனை சக்தியும் இனி தன்னிடமும் இருக்கும் என்ற இருமாப்பும் அவனை பிடித்து கொண்டது. அவனது கர்வத்தை அடக்க நினைத்து அவனை நல்வழி படுத்த நினைத்தார் குரு. தேவலோகத்தில் இருக்கும் சந்திரனாக இருந்தாலும் சரி, பூலோகத்தில் இயந்திரங்களின் பிடியிலும், இந்த்ரியங்களின் பிடியிலும் சிக்கி தவிக்கும் மனிதர்களாக இருந்தாலும் சரி… நம்மிடம் கர்வம் இருக்கும் வரை சர்வமும் சறுக்கலில் தான் முடியும்.

சந்திரன் கர்வத்தால் சறுக்கி விட கூடாது, விழ கூடாது என நினைத்த குரு, சந்திரனை அழைத்து பூலோகத்தில் புதிதாய் பிறந்த ஒரு குழந்தையை சுட்டி காட்டி அந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்குமாறு பணித்தார்.  அஹா, கிடைத்த முதல் அஸைன்மென்டே இவ்வளவு ஈஸியாக இருக்கிறதே என்ற குஷியில் அந்த குழந்தைக்கு கிடு கிடுவென ஜாதகம் கணித்து , குருவின் முன்னே ஓடி வந்து அந்த ஜாதக பலனையும் படித்து காட்டினான் சந்திரன். “ குருவே தாங்கள் எனக்கு அளித்த பணியை இதோ செப்பனே செய்து விட்டேன். இதோ குழந்தையின் ஜாதகம். இந்த ஜாதகத்தின் படி , அந்த குழுந்தை சரியாக தன்னுடைய ஒன்றாவது வயதை எட்டும் போது ஒரு பாம்பு தீண்டி இறந்து விடும் என்றே இந்த ஜாதக பலன் கூறுகிறது” என்று சொல்லி ஜாதகத்தை நீட்டினான். “ சரி சந்திரா… நீ சொல்வது படி பார்த்தால் அடுத்த ஆண்டு இதே நாளில் அந்த குழந்தை இறந்து விடும் அப்படி தானே? அதனால், இதே நாள் அடுத்த ஆண்டு இங்கே வா நாம் சந்தித்து கொள்வோம்” என்று கூறினார் குரு.

ரு வருட காலம் ஓடியது. அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளும் வந்தது. அக்குழந்தையின் பெற்றோர் அந்த பிறந்த நாளை தடபுடலாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விருந்தில் கலந்து கொள்ள வரிசை கட்டி வந்து கொண்டிருந்தனர் விருந்தினர்கள். குழந்தையை அழகாக அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் இட்டாள் தாய். வையகத்தில் நடந்த பிறந்த நாள் வைபோகத்தை வானுலகில் இருந்து லைவ் டெலிகாஸ்டாக  பார்த்து கொண்டிருந்தனர் குருவும் சந்திரனும். தான் சொன்னது பலிக்க போகிறது என்று ஏகப்பட்ட பரபரப்பில் இருந்தான் சந்திரன். குரு ஒன்றும் சொல்லாமல், ஒன்றும் செய்யாமல் அந்த குழந்தையை மேலிருந்து பார்த்த படியே இருந்தார். சந்திரன் குறித்து சொன்னபடி குறித்த நேரத்தில் பாம்பு ஒன்று படமெடுத்து கொண்டே அந்த குழந்தை இருந்த தொட்டிலின் மேல் வந்து நின்றது. ஆஹா நாம் சொன்ன படியே நடக்க போகிறது என்று ஏக குஷியில் இருந்தான் சந்திரன். அப்போது சட்டென்று தொட்டிலில் இருந்த அந்த குழந்தை தனக்கு மேலே ஏதோ பள பளவென இருக்கிறதே..இதுவும் ஒரு விளையாட்டு பொம்மையோ என   நினைத்து தொட்டிலின் சங்கிலியை பிடித்து ஆட்ட, அந்த சங்கிலியின் சிக்கலில் பிடிக்கொண்ட பாம்பு இறந்தே போனது. அடடா தன் கணிப்பு தப்பாகி விட்டதே. குழந்தை தப்பி பிழைத்து விட்டதே. ஜாதகத்தின் படி அந்த குழந்தை பிழைக்க வாய்ப்பே இல்லை. ஒரு வேளை ஜாதக ரீதியாக குருவின் பார்வை லக்னத்தை பார்த்தபடி அமைந்திருந்ததால், அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை பிழைத்திருக்கலாம். ஆனால் அப்படி ஒர் அமைப்பு அங்கே இல்லவே இல்லயே என்று தன் மீது பார்வையை படர விட்டு கொண்டிருக்கும் குருவை பார்த்து கேள்வி கேட்டான் சந்திரன். சிரித்த படியே அதற்கு குரு சொன்னார், “ஜாதகப்படி அங்கே நான் பார்க்க விட்டால் என்ன… இதோ இப்போது நேரிடையாக நான் அந்த குழந்தையை அல்லவா பார்த்து கொண்டிருக்கிறேன்” என்று. குருவின் அருட் பார்வை பலத்தையும் புரிந்து கொண்டு தன் தவற்றையும் புரிந்து கொண்டான் சந்திரன்.

ஜாதக ரீதியாக நம் ஒவ்வொருக்கும் எத்தனை எத்தனையோ கோளாறுகள் கோள்களின் வாயிலாக இருக்க தான் செய்யும். ஆனால், அந்த கோளாறுகள் அனைத்தையும் நீக்க வல்லது குருவின் பார்வை மட்டுமே. பூலோகத்தில் நம் கண் எதிரே நடமாடும் குருக்கள் எத்தனையோ பேர். நடமாடி விட்டு சென்றவர்களும் எத்தனையோ பேர். குருவை சரணடைவோம். அவரது அருட் பார்வை என்பது நம் மீது பட்டு விட்டால்…
துன்பம் ஏது… துயரம் ஏது?

1 COMMENT

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...