ஒரே நாளில் முகப்பருக்களிலிருந்து விடுதலையா?

ஒரே நாளில் முகப்பருக்களிலிருந்து விடுதலையா?

திகமான மக்கள் தங்கள் முகங்களில் வரும் முகப்பருக்களைப் பார்த்து மிக வேதனை அடைகிறார்கள். அதுவும் நாம் நமக்குப் பிடித்தவரைப் பார்க்கப் போகும் தருணத்திலும், முக்கியமான விசேஷங்களில் பங்கேற்கும் நேரம் வரும் பொழுதும், விருந்தாளிகள் போல் இந்த முகப்பருக்களும் நம் முகத்தில் வந்து விடுகின்றன. இந்த முகப்பருக்களுக்கு காரணம் உடல் சூடு, எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் சுற்றுச் சூழலெனப் பல உண்டு. இந்த முகப்பருக்களை ஒரே நாளில் அதுவும், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படிப் போக வைப்பது என்பதைப் பார்ப்போம்.

எலுமிச்சைப்பழம் : ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை நன்றாகச் சாறு பிழிந்து, அந்த சாற்றினை ஒரு காட்டன் துணியில் நனைத்து. இரவு உறங்கும் முன் உங்கள் முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்து முகத்தை மிதமான நீரில் கழுவிக்கொள்ளுங்கள்.உங்கள் முகப்பருவின் வீக்கம் குறைந்து விடும் அல்லது முகப்பரு போன இடம் தெரியாது.

ஐஸ் கட்டி : பனிக் கட்டியை எடுத்து ஒரு காட்டன் துணியில் கட்டி உங்கள் பரு உள்ள இடத்தில் வைத்தால் அது பருக்களின் வீக்கத்தைக் குறைக்கும். எப்படி? அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எண்ணெய்ப் பிசுக்குகளைக் குறைக்கும். ஒருமுறை உங்கள் முகத்தில் இந்த  பனிக் கட்டியை வைத்தால் 2 முதல் 3 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். இதனை ஒரு நாளுக்கு 5 - 6 முறை செய்தால் ஒரே நாளில் பலன் கிடைக்கும்.

தேன் : தேனிற்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இதனால் உடலுக்கு வரும் நோய்க்கிருமிகளை இது தடுத்துவிடும். தேனை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். காட்டன் துணியில் நனைத்து உங்கள் முகங்களில் தடவிக் கொள்ளவும். ஒரு 30 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி விட்டு, காட்டன் துணியில் உங்கள் முகத்தைத் துடைத்துக் கொள்ளவும். இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகப்பருக்களுக்கு நிரந்தர முடிவுதான்.

பூண்டு : பூண்டிற்கு நிறைய நல்ல மருத்துவ குணங்கள் உண்டு. நான்கு முதல் ஐந்து பல் பூண்டுகளை எடுத்துக்கொண்டு,அதை நன்கு மசிய அரைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும் 5 நிமிடம் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவிக் கொள்ளவும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்தால் உங்கள் முகம் அழகாகும். நீங்கள் எதிர்பார்த்த முகப்பரு பிரச்சினை தீர்ந்துவிடும்.

வெள்ளரிக்காய் ; வெள்ளரிக்காய் உடலுக்குக் குளிர்வு தரும். அதுமட்டுமின்றி வெள்ளரிக்காயில் வைட்டமின் A, C, E உள்ளது. வெள்ளரிக்காயினைச் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து முகப்பரு உள்ள இடங்களில் வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து விடவும். முகப்பருக்களின் வீக்கம் வற்றி இருக்கும்.

மேற்குறிப்பிட்ட வழிகளில் ஏதேனும் ஒரு எளிமையான முறையை வீட்டிலேயே செய்து முகத்தை அழகாக மாற்றி,முகப்பருக்களிலிருந்து விடுபடலாம். முயற்சி செய்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com