பள பள முகத்திற்கு குளு குளு ஃபேஸ் பேக்!

பள பள முகத்திற்கு குளு குளு ஃபேஸ் பேக்!

ந்த  பேக்கை தயாரிக்க நாம் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டுதான் செய்யப் போகிறோம். அதுவும் இல்லாமல் இதில் சேர்க்கப்படும் பொருட்களை இதுவரை நாம் அழகிற்காக பயன்படுத்துகிறோமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம். அப்படியான புதுமையான ஒரு பேக் இது.

இந்த பேக்கை தயாரிக்க முதலில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி எடுத்து நன்றாக சுத்தம் செய்து பிறகு சின்ன சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் புதினாவையும் வாங்கி இலைகளை மட்டும் தனியாக எடுத்து அதையும் சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.  தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது எடுத்து வைத்த இந்த புதினா, மல்லி இலைகளை போட்டவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு டம்ளர் ஆகும்படி சுண்ட விட வேண்டும் பின் ஒரு டம்ளர் கால் டம்ளர் ஆக வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்து ஆற விட வேண்டும் கற்றாழையை எடுத்து அதன் தோல்களை நீக்கிய பிறகு நான்கு அல்லது ஐந்து முறை அதன் ஜெல்லை சுத்தமாக கழுவி, அதை இரண்டு ஸ்பூன் வரும் அளவிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடன் இந்த புதினா கொத்தமல்லி சாறையும் இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து கொண்டே இருந்தால் இளம் பச்சை நிறத்தில் பேஸ்ட் போல கிடைக்கும் இந்த பேஸ்ட்டை இரவு உறங்கச் செல்லும் முன் உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு முகத்தில் பூசி அப்படியே உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிடுங்கள். சோப்பு பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய முகத்தில் பெரிய அளவில் மாற்றம் தெரியும். முகத்தில் இருக்கும் அழுக்குகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சன் டேன் போன்றவை அனைத்தும் சரியாகும். இந்த பேக்கை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு முகப் பொலிவுடன் மிக அழகாக மாறிவிடுவீர்கள். இதை அதிக அளவில் தயாரித்து வைத்து பிரிட்ஜில் கூட வைத்து பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com