முகம் பளபளப்பாக இருக்க சில எளிய வழிகள்!

முகம் பளபளப்பாக இருக்க சில எளிய வழிகள்!

வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகத்தை நன்றாக கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்ள சருமம் பாதிப்படையாது. கொஞ்சம் தயிரில் லெமன் ஜுஸ் கலந்து முகத்திற்கு மசாஜ் பண்ண கருமை மறையும்.

தேன் தினமும் எடுத்துக் கொள்ள சருமம் பளபளப்பாக இருக்கும்.

ரை ஸ்பூன் தேனில் இரண்டு ஸ்பூன் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கழுத்து, கைகளில் தடவி பின் கழுவி வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து மேனி பளபளப்பாக இருக்கும்.

ரவில் ஊற வைத்த வெந்தயத்தை மறுநாள் குடித்து வர முடி உதிர்வது. பொடுகு பிரச்சனையும் வராது. உடலுக்கும் குளிர்ச்சியை தந்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

ரு டீஸ்பூன் பால் பவுடர், முட்டை, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதை முகம், கழுத்து, கை பகுதிகளில் நன்றாக தேய்த்து  பின் குளிர்ந்த நீரில் கழுவ தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக ஆரோக்யமாக இருக்கும்.

யதாக வயதாக தோலின் நிறம் பொலிவு மாறும். நாம் நம்‌முப்பதுகளில் எடுக்கும் தோல் பராமரிப்பு தான் நம்மை வயதானாலும் இளமையோடு வைத்திருக்கும்.

வீரியம் அதிகமான ரசாயனத் தன்மை உள்ள பொருட்களை பயன்படுத்துவதால் தோலில் புண், எரிச்சல், தடித்து வீங்குதல், தோல் சுருங்கி தேமல், கரும்புள்ளி போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

வைட்டமின் ஏ, சி மற்றும் பழத்தன்மைஅதிகம் கொண்ட கிரீம்கள் தோலின் தன்மையை மாற்றி தோலுக்கு புதுப்பொலிவைத் தரும்.

தினமும் குறைந்தது 3-4லி தண்ணீர் அருந்த வேண்டும்.

ளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சரும சுருக்கமின்றி முக வரி, சுருக்கமில்லாமல் ஆரோக்யமாக இருக்கும்.

தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பல நிற பழங்கள் சாப்பிடுவது நல்லது.

டற்பயிற்சி, நடைபயிற்சி நல்லது.

டிக்கடி முகத்தை நன்றாக கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குளித்தவுடன் முகத்தை அழுத்தித் தேய்க்காமல், துணியால் மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும்.

னதில் கவலையை குறைத்துக் கொண்டு உடலை உறுதியாக்கும் யோகா, சமச்சீர் உணவு, பிடித்த விஷயங்கள் செய்தல் போன்றவை முகவாட்டம், இல்லாமல் செய்யும். மனதில் இளமையோடு, புத்துணர்வு தரும் விஷயங்களை விரும்பி செய்ய முதுமை கிட்ட வர தாமதமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com