சரும அழகுக்கு தேனை எப்படி பயன்படுத்துவது??

சரும அழகுக்கு தேனை எப்படி பயன்படுத்துவது??
Published on

தேன் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக் பற்றி பார்க்கலாம்.

தேன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பெண்கள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டம் அளித்து அதன் ஆரோக்கியத்தையும் பயன்படுத்துகிறது. ரசாயனமில்லாத மேக்கப்புக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டி ஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக்கு களை பற்றி பார்க்கலாம்.

தயிர், தேன் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தின் நன்றாக இருப்பது மட்டுமின்றி அதிலுள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ப்ரோ பயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாகி வீக்கத்தை தடுக்கும், தணிக்கும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.

சமையலறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவைத்தரும். ஒரு டீஸ்பூன் ஓட்சை மிக்ஸியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக தேய்க்கவும் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவும் இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது. தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணையை சுத்தம் செய்து புதிய பொலிவைத்தரும் அதே சமயம் தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்கை முகத்தில் பூசுவதால் வறண்ட தன்மை நீங்கி முகத்துக்கு பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

ரு டீஸ்பூன் சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம் முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும் சிறந்த டோனராக செயல்படும் இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com