
• வைட்டமின் ஏ, பி மற்றும் சி மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்கள் பூசணி விதைகளில் நிறைந்துள்ளன.
• பூசணி விதைகளில் காணப்படும் துத்தநாகம், முடி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
• பூசணி விதைகள் முடி உதிர்வை தடுத்து வேர்களை ஆரோக்கியமாக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது.
• இதில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தும். மேலும் பூசணி விதைகள் வறட்சி மற்றும் எரிச்சலிலிருந்து பாதுகாத்து.
• முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம், முடியை வலுப்படுத்த உதவுகிறது.
• பூசணி விதைகளில் உள்ள பைட்டோகெமிக்கல் கலவைகள் முடி உதிர்வைத் தடுக்கிறது.
• உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
• இதிலுள்ள வைட்டமின் ஈ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உச்சந்தலையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.
பயன்படுத்தும் முறை :
மிக்ஸியில் பூசணி விதைகளை நன்றாக தூள் ஆகும் வரை அரைத்து தயிருடன் கலந்து பேஸ்ட் செய்து ,அதனுடன் தேன், தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க் போன்று கூந்தலின் வேர்கள் முதல் நுனி முடிவரை தடவவும்.
30 நிமிடங்கள் ஊறய பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசி, ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் போட்டு அலசவும். முறையாக கடைபிடித்து வந்தால் முடி உதிர்வு தடுக்கப்பட்டு ஆரோக்கியமான கூந்தலை பெறலாம் என்பது உறுதி.