முடி அடர்த்தியாக வளரணுமா? இதோ அசத்தலான 5 டிப்ஸ்!

Want to grow thick hair?
Want to grow thick hair?

பொதுவாக முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மற்றும் வெளிப்புற மாசுபாட்டின் காரணமாக பெரும்பாலும் முடி சேதமடைகிறது. அந்த வகையில் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக முடியை வளர்க்க இந்த 5 டிப்ஸ்களை பயன்படுத்துங்கள்.

சீரான உணவு

முடி உதிர்தலை தடுக்க, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி ஆகியவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். மேலும் கீரை, முட்டை, பருப்புகள் மற்றும் மீன் போன்ற உணவுகள் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உணவில் பல்வேறு பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

உச்சந்தலை மசாஜ்

ண்ணெய்யைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது, மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டி, ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். எண்ணெயை சிறிது சூடாக்கி, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ கொண்டு முடியை அலச வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறைப்பில் வைட்டமின் மற்றும் கனிமங்களின் பங்கு!
Want to grow thick hair?

கற்றாழை ஜெல்

ற்றாழை ஜெல் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவும்.
கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவி, சுமார் 45 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின் ஷாம்பூ கொண்டு அலச வேண்டும்.

முடி பராமரிப்பு

ரமான முடியில் சிக்கை அகற்றுவதற்கு அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்த வேண்டும். தலைமுடியை எப்போதும் காற்றில் உலர்த்த வேண்டும். கூடுதலாக, முடிகளை இறுக்கமாக கட்டுவதைக் தவிர்க்கவும்.        

ரசாயனங்களை தவிர்க்கவும்

ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் போன்ற ரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகள் அதிகமாக பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com