உடல் எடை குறைப்பில் வைட்டமின் மற்றும் கனிமங்களின் பங்கு!

உடல் எடை குறைப்பில் வைட்டமின் மற்றும் கனிமங்களின் பங்கு!

ற்காலத்தில் பெரும்பாலானவர்களின் மனக்கவலையே உடல் பருமன்தான். வயது வித்தியாசமின்றி இதனால் பாதிக்கப்பட்டு நிறைய பேர் அவதியுறுகின்றனர். உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ணும் பழக்கத்தையும் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், இவை மட்டும் உடல் பருமனைக் குறைக்கப் போதாது.

உடல் எடையைக் குறைக்க பெருமளவு உதவிபுரிவது உணவுகளில் உள்ள வைட்டமின்களே. சரியான விகிதத்தில் எடுக்கப்படும் வைட்டமின்கள் உடலின் ஆற்றலை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைத்து, கொழுப்பைக் கரைத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைத்து நலன் காக்கும் ஒருசில கனிமங்கள் அடங்கிய வைட்டமின்கள் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது எட்டு வகை வைட்டமின் பி க்களை கொண்டுள்ளதாகும். பல வகைகளில் உடல் எடையை குறைக்க உதவி புரிகிறது. ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை சீராக்கி கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. கீரைகளில் அதிகம் உள்ளது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்.

வைட்டமின் டி: வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான், மற்றும் காலை, மாலை சூரிய ஒளி போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி: வைட்டமின் சியினால் ஆற்றல் திறன் அதிகரித்து, அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்: கால்சியத்திற்கும் உடல் எடை குறைப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. இதில் முரண்பாடுகள் இருந்தபோதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், கொழுப்புகளை கரைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.

குரோமியம்: உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல்நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் அவசியமாகத் தேவைப்படுகிறது. மேலும் இது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கும் உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்: கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால், இந்த முக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பியுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கு இது உதவும். இதன் குறைபாட்டால் கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைப்பட்டுபோகும். சோயாவில் கோலின் என்னும் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

ஜிங்க்: தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட, மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம். அனைவருக்குமே ஜிங்க் சத்து கடல் உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

மாங்கனீசு: கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு மெட்டபாலிசத்தை எரிக்க உதவுவதால், உடல் எடை குறைப்புக்கு மாங்கனீசு பெரிதும் துணையாக நிற்கும். மாங்கனீசு சத்து அன்னாசி பழத்தில் அதிகம் நிறைந்திருக்கிறது.

மக்னீசியம்: மக்னீசியம் குறைபாடு இருந்தாலும் கொழுப்பை எரிப்பதிலும், உடல் எடை குறைவதிலும் தடைகள் ஏற்பட்டுவிடும். மேலும், இது உடல் ஹைட்ரேஷன் அமைப்பு மற்றும் ஆற்றல் திறன் உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, சரியான மெட்டபாலிக் அளவை பெற இது கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மக்னீசியம் குறைபாடு வராமல் இருக்க பூசணிக்காய் மற்றும் அதன் விதைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com