அன்னாசி பழ ஃபேஸ்பேக் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்?

அன்னாசி பழ ஃபேஸ்பேக் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்?

ன்னாசி பழம் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்களில் ஒன்றான பைனாப்பிள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அன்னாசி பழத்தை வெறும் ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி அழகுக்காகவும் பயன்படுத்த முடியும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. சருமத்தை அழகாக வைத்திருக்க அன்னாசியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.

அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவன. குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும்.

க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம்

ன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டிருக்கிறது. பருக்களும் பருவால் ஏற்பட்ட தழும்புகளும் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துங்கள்.

அன்னாசி பழத்தின் சாறை சிறிதளவு எடுத்துக் கொண்டு முகம் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் டோனராக ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது விரைவிலேயே பருக்களும் பருவால் வந்த தழும்புகளும் மறைந்து க்ளியர் சருமத்தை பெற முடியும்.

கருவளையம் நீங்க அன்னாசி

திகப்படியான சோர்வு, வயதாவது போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் கருவளையங்கள் தோன்றும். இந்த கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.


அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது வயதாவதால் உண்டாகும் கண் சுருக்கங்களை சரிசெய்ய உதவும். சிறிதளவு அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுங்கள். இதை தினமும் கூட செய்து வரலாம். இப்படி செய்து வரும்போது கண்களைச் சுற்றிலும் உண்டாகிற கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்கச் செய்யும்.

ஆரோக்கியமான நகங்களுக்கு அன்னாசி

கங்கள் அதிகமாக வறட்சியாவது, உடைதல் போன்ற பிரச்சினைகள் சிலருக்கு அடிக்கடி ஏற்படும். நகங்கள் ஆரோக்கியமில்லாமல் இருப்பதற்கு வைட்டமின் ஏ மற்றும் பி பற்றாக்குறை முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

நகங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அன்னாசி பழச்சாறு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பைனாப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம் வைட்டமின் பற்றாக்குறை சரிசெய்யப்படும். அதேபோல அந்த சாறினை நகங்களில் அப்ளை செய்யலாம். இப்படி செய்வதால் நகங்கள் உறுதியாகவும் அழகாகவும் மாறும்.

அழகான பற்களுக்கு அன்னாசி

ன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி பற்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது.

முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் பற்கள் மஞ்சள் கறை இல்லாமல் பளிச்சென வெண்மையாக இருந்தால் தான் முகத்தின் பளபளப்பு இன்னும் கூடும். இதற்கு அன்னாசி பழம் மிக உதவியாக இருக்கும்.

அன்னாசி பழத்தின் சாறில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதை டூத் பிரஷில் தொட்டு நன்கு பல் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செய்தால் போதும். பற்கள் முத்து போல ஜொலிக்கும். அடிக்கடி செய்தால் இதிலுள்ள அமிலத்தன்மை பல் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com