மேஷம் - 23-12-2022

மேஷம் - 23-12-2022
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். 

அசுபதி:இன்று வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். மனைவி வழியில் அனுகூலம் உண்டு.

பரணி:இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள் உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.
கிருத்திகை 1ம் பாதம்:இன்று அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்டஎண்: 9, 3

logo
Kalki Online
kalkionline.com