dina palan
dina palan

14-11-2022

திங்கட்கிழமை

மேஷம்

இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அசுபதி: இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும்

பரணி: எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
கிருத்திகை 1ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு

அதிர்ஷ்டஎண்: 1, 3, 9

ரிஷபம்

இன்று கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
ரோஹிணி: வீண்அலைச்சல் ஏற்படும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:  குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

மிதுனம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தொழில் போட்டிகள் குறையும்.
திருவாதிரை: சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 9

கடகம்

இன்று நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

புனர்பூசம் 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
பூசம்: கணவன் மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.
ஆயில்யம்: ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்

இன்று புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

மகம்: காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
பூரம்: வீண் அலைச்சல் காரிய தடை மனகுழப்பம் ஏற்படலாம்.
உத்திரம் 1ம் பாதம்: கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 3

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும்.
ஹஸ்தம்: எதிர்ப்புகள் விலகும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

துலாம்

இன்று உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.  குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
ஸ்வாதி: புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்டஎண்: 2, 6

விருச்சிகம்

இன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.  எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் 4ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம்.
அனுஷம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும்.
கேட்டை: கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

தனுசு

இன்று அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

மூலம்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.
பூராடம்: நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்

இன்று ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும்.
திருஓணம்: சந்திரன் சஞ்சாரம் புதிய நபர்களின்  நட்பை ஏற்படுத்தும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 3

கும்பம்

இன்று நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: சில்லறை பிரச்சனையை சமாளிக்க  வேண்டி இருக்கும்.
சதயம் 4ம் பாதம்: பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தொழில் வியாபாரம் சீராக நடக்கும்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
உத்திரட்டாதி: பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.
ரேவதி: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com